உ.பி., சிறைச்சாலைகளில்நவீன சமையலறைகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உ.பி., சிறைச்சாலைகளில்நவீன சமையலறைகள்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement



லக்னோஉத்தர பிரதேசத்தில், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு, நவீன சமையலறைகள் மூலம், உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள சிறைக் கைதிகளுக்கு, நவீன சமையலறைகளில், உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.இது குறித்து, சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆங்கிலேயர் காலத்தில் இருந்து, சிறைகளில் பழைய நடைமுறைப்படி உணவு தயாரிக்கப்பட்டு, கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கைதிகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.இதையடுத்து, மாநிலத்தில் முதற்கட்டமாக, 25 மாவட்டங்களில் உள்ள சிறைகளில், 4.71 கோடி ரூபாயில், நவீன சமையலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது, விரைவில் அனைத்து சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.நவீன சமையலறைகளில், காய்கறி வெட்டும் கருவி, கிரைண்டர், புகைபோக்கி உள்ளிட்ட பல உபகரணங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி உணவு தயாரிப்பதால், கைதிகளுக்கு எந்த உடல்நல பிரச்னையும் ஏற்படாது.மேலும், 1,000க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு தேவையான உணவை, இரண்டு மணி நேரத்திலேயே தயாரிக்க முடிகிறது. இந்த உபகரணங்களை இயக்குவது குறித்து, வல்லுனர்கள் மூலம், கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X