பஞ்., முதல் பார்லி வரை ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா? தேர்தல் கமிஷனிடம் சட்ட ஆணையம் கேள்வி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சாத்தியமா?
பஞ்.,முதல் பார்லி வரை ஒரே நேரத்தில் தேர்தல்...
தேர்தல் கமிஷனிடம் சட்ட ஆணையம் கேள்வி

புதுடில்லி: 'பஞ்சாயத்து முதல் லோக்சபா வரை, அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்' என, மத்திய அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில், இது தொடர்பாக, சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமைதேர்தல் கமிஷனிடம், இந்திய சட்ட ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

பஞ்சாயத்து,பார்லி,ஒரே நேரத்தில்,தேர்தல்,சாத்தியமா?


'அளவுக்கு அதிகமான செலவு மற்றம் நேர விரயம் ஆகியவற்றை தவிர்க்க, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், சட்டசபை, லோக்சபா மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கையை, மத்திய அரசு, நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வருகிறது.

கமிட்டி


இது தொடர்பாக, விபரமான ஆய்வு நடத்த, உ.பி., மற்றும் ம.பி., அரசுகள் சிறப்பு கமிட்டிகளை உருவாக்கி உள்ளன. பார்லி., நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கையில் கூட, அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டு இருந்தது.'ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் வாயிலாக, நேரம், பணம் மற்றும் உழைப்பு மிச்சப்படுவதுடன், தேர்தல்

முறைகேடுகளும் குறையும்' என, பார்லி., நிலைக் குழு கருத்து தெரிவித்தது.

இது தொடர்பான சட்ட திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென,சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம், டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், லோக்சபா, சட்டபை தேர்தல்களுடன் சேர்த்து, பஞ்சாயத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து, தேர்தல் கமிஷனி டம், இந்திய சட்ட ஆணையம் கேள்வி எழுப்பியது.

இதற்கு தேர்தல் கமிஷன் கூறிய பதில் வருமாறு: லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல் களை ஒரே நேரத்தில் நடத்துவதில், தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்கள் உள்ளன. சட்டசபை தேர்தல்களின் போது, தொகுதிகளின் எல்லைகள் ஒருவிதமாகவும், பஞ்சாயத்து தேர்தல்களின் போது, தொகுதிகளின் எல்லை வேறு விதமாகவும் வரையறுக்கப்படுகிறது. அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப, இவை மாறுபடுகிறது.

சவால்


ஒரே நேரத்தில் எல்லா தேர்தல்களையும் நடத்த வேண்டுமானால், அனைத்து மாநிலங்களிலும், தொகுதிகளின் எல்லைகள், தெளிவாக வரையறுக் கப்பட வேண்டும். மேலும், 78 கோடி வாக்காளர் களுக்கு,ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, மிகப் பெரிய சவால்.இந்திய தேர்தல் கமிஷனால், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி வார்டுகளில் இருந்து அனைத்து தகவல்களை ஒன்று திரட்ட முடியாது. மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, ரூ.500 கோடிசெலவாகும்.

Advertisement

வரும் பட்ஜெட்டில்,ரூ.300 கோடி ஒதுக்கும்படி, கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பட்டியலில் சிக்கல்


வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் இருக்கும் பிரச்னை குறித்தும், தேர்தல் கமிஷனிடம், இந்திய சட்ட ஆணையம் கேள்வி எழுப்பியது; அதற்கு தேர்தல் கமிஷன் அளித்த பதில் வரு மாறு:லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் களை இந்திய தேர்தல் கமிஷன் நடத்துகிறது. பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களை மாநில தேர்தல் கமிஷன் நடத்துகிறது.

இதில் சில மாநிலங்கள், தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியலை நம்பி இருக்கின்றன. பல மாநிலங்கள், அவர்களாகவே ஒரு பட்டியல் வைத்துள்ளனர். வாக்காளர் பட்டியல் தயாரிக்க, மாநில தேர்தல் கமிஷன் ஒரே விதமான வழிமுறையை பின்பற்றுவதில்லை. அதனால், கோடிக்கணக்கான வாக்காளர்களை, ஒரே சமயத்தில் ஓட்டளிக்க வைப்பது, சிரமம். இவ்வாறு பதிலளிக்கப்பட்டது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan - Chennai,இந்தியா
18-மே-201818:50:36 IST Report Abuse

Manikandanமின்னணுவில் வோட்டு போட்டவுடனே ஒப்புகை சீட்டு வரவேண்டும், அந்த சீட்டு சரி பாட்டு அடையும் டபாவில் போடவென்னும், இரண்டுமே சரியானால் மட்டுமே வாக்கு செல்லுபடிகனும்.

Rate this:
18-மே-201811:55:23 IST Report Abuse

குறிஞ்சி நில கடவுள்சாத்தியம்தான். ஆனா எல்லா ஓட்டும் ஒரு கட்சிக்கு போற மாதிரி புரோக்கிராம் பன்னதான் கொஞ்சம் சிரமமா இருக்கும் but no problem ஹமாரா தேஷ்மே அச்சே தின் ஆகயா...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-மே-201811:48:18 IST Report Abuse

தங்கை ராஜாநல்ல நோக்கம் இல்லாத எந்தவொரு செயலும் நாசத்தில் கொண்டு போய் விடும். இதுவும் அப்படித்தான்.

Rate this:
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
18-மே-201811:05:19 IST Report Abuse

Kansami Ponsamiசட்ட ஆணையமும் தேர்தல் கமிஷனும் ஒரே பார்ட்டி..ஏற்கனவே வரைவுபடுத்தப்பட்டதை பிஜேபி செயல்படுத்தும்..அதற்கான அபிஷியல் முயற்சிதான் இது..இ வி எம் துணையுடன் ஒட்டு மொத்த இந்தியாவும் பிஜேபி பிடியில் சிக்கி நாசமாக போகிறது...

Rate this:
AM FAROOK - chennai,இந்தியா
18-மே-201809:26:01 IST Report Abuse

AM FAROOKவாக்குசீட்டு முறையில் தேர்தல் நடந்தால்தான் உண்மையாக நடக்கும். தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது மேலும் ஒரு கட்சியுடைய உறுப்பினர் வெற்றி பெற்று உடன் வேறு கட்சிக்கு தாவா முயன்றால் உறுப்பினர் பதவி யை இழக்க நேரிடும் என்று இருந்தால் குதிரை பேரம் நடக்காது மற்றும் தபால் ஒட்டு என்னும் போதும் பிறகு எலக்ட்ரானிக் மெஷின் என்னும் போதும் பெரிய மாறுதல் தெரியுது எனவே வோட்டு சீட்டு முறையை சிறந்தது மக்களுக்கு நம்பிக்கை வரும்

Rate this:
senthil - Pasumbalur,இந்தியா
18-மே-201808:24:37 IST Report Abuse

senthilவாக்கு சீட்டு முறையில் வெளியில் ஓட்டு போட்டு உள்ள வந்து சீட்டு போடலாம். கள்ள ஓட்டு நல்லா போடலாம். பணத்துக்கு ஓட்டு போடறது ஒரு தடவை போட்டால் அடுத்த்து ஐந்து வருடம் கிடைக்காது.மக்கள் மனம் மாற வாய்ப்புண்டு. கால விரயமும் குறைக்கலாம். . நாட்டின் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
18-மே-201808:23:35 IST Report Abuse

balakrishnanஇதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று, யார் வேண்டுமானாலும், எந்த ஒரு உறுப்பினரையும் பகிரங்கமாக வெளிப்படையாக விலைக்கு வாங்க முடியும் என்கிற நிலைமை நிலவி வரும் சூழலில், கட்சி மாறும் தடை சட்டம் ஒரு நீர்த்துப்போன நிலையில் இதுபோன்ற ஏற்ப்பாடு தோல்வியில் தான் முடியும்

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மே-201804:22:26 IST Report Abuse

Kasimani Baskaranதேர்தல் என்ற பெயரில் ஏராளாமான மனித வளம் வீணடிக்கப்படுகிறது... ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல் என்றால் நிச்சயம் நாட்டுக்கு லாபம்... மக்களுக்கும் லாபம்..

Rate this:
Kali - Trichy,இந்தியா
18-மே-201814:00:53 IST Report Abuse

Kaliமக்களுக்கு லாபம் இல்லை. நாம்தான் கண்கூடாக பார்க்கிறோமே பல்வேறு மாநில தேர்தல்களின் போதாவது எரிபொருள் விலை ஏற்றத்தை நிறுத்தி வைப்பதால் தேர்தல்கள் ஒன்றாக நடப்பது மக்களுக்கு லாபம் இல்லை...

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
18-மே-201801:23:56 IST Report Abuse

அன்புஒரே நேரத்தில் தேர்தல் என்பது கோமாளித்தனம். கர்நாடக தேர்தல் ரிசல்ட்டை பார்த்த பின்னர் கூட, ஒரே நேரத்தில் தேர்தல் வேண்டுமா? இந்தியா முட்டாள்களின் கூடாரமாக மாறிவருகிறது. நாடு தறிகெட்டு போய்க்கொண்டிருப்பதை பார்க்கும்போது, விரைவில் மோடி விலக வேண்டும். அல்லது இந்தியா ஆப்பிரிக்கா ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

Rate this:
S.AJINS - CHENNAI,இந்தியா
18-மே-201800:38:00 IST Report Abuse

S.AJINSவாக்குசீட்டு முறையில் தேர்தல் நடந்தால்தான் உண்மையாக நடக்கும். தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement