நியமன எம்.எல்.ஏ., விவகாரம் கவர்னருக்கு எதிராக மனு தாக்கல்| Dinamalar

நியமன எம்.எல்.ஏ., விவகாரம் கவர்னருக்கு எதிராக மனு தாக்கல்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி, கர்நாடக சட்ட சபையில், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன், ஆங்கிலோ - இந்தியன் ஒருவரை, நிய மன உறுப்பினராக நியமித்த, கவர்னரின் செயலை எதிர்த்து, காங்., - ம.ஜ.த., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது.கர்நாடக சட்டசபையில், மொத்தம், 224 இடங்கள் உள்ளன. இவற்றில், 222 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 104 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெருங்கட்சியாக திகழும், பா.ஜ.,வை சேர்ந்த, எடியூரப்பா, முதல்வராக நேற்று பொறுப்பேற்றார்.இந்நிலையில், ஆங்கிலோ - இந்தியன் சமூகத்தை சேர்ந்த, வினிஷா நெரோவை, நியமன, எம்.எல்.ஏ.,வாக, கவர்னர் வஜுபாய் வாலா நேற்று நியமித்தார்.இதன் மூலம், சட்டசபையில், பா.ஜ.,வுக்கு ஆதரவான, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும் என, காங்., மற்றும் ம.ஜ.த., கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.அதில், 'சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு முடியும் வரை, கவர்னர், யாரையும், எம்.எல்.ஏ.,வாக நியமிக்க கூடாது; கவர்னரின் தற்போதைய நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே, எடியூரப்பாவை முதல்வர் பதவி ஏற்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் சேர்த்து, இந்த மனு மீதான விசாரணையும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை