கர்நாடகாவை விட்டு வெளியேறும் காங்., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள்! Dinamalar
பதிவு செய்த நாள் :
கர்நாடகாவை விட்டு வெளியேறும்
காங்., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள்!

பெங்களூரு : கர்நாடக சட்டசபையில், எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு விரைவில் நடக்கவுள்ளதால், பெங்களூரு சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள, காங்., மற்றும் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களை, வேறு மாநிலங்களில் பத்திரமாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கர்நாடகாவை, விட்டு, வெளியேறும் ,காங்., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள்!


பா.ஜ.,வைச் சேர்ந்த எடியூரப்பா,கர்நாடக முதல்வராக நேற்று பதவியேற்றார். இதை தொடர்ந்து, 15 நாட்களுக்குள், சட்டசபையில் அவர், பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும். பெரும்பான்மைக்கு, இன்னும்,8 எம்.எல்.ஏ.,க் களின் ஆதரவு தேவைப்படுவதால், தங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., பக்கம் இழுக்கவோ, அவர்களை ராஜினாமா செய்ய வைக்கவோ, பா.ஜ., தலைவர்கள், மத்திய

அமைச்சர்கள் முயற்சிப்பதாக, காங்., - ம.ஜ.த., குற்றஞ்சாட்டியுள்ளது.

காங்., தலைவர்கள் சிலர் கூறியதாவது: எங்கள், எம்.எல். ஏ.,க்களில், ஆனந்த் சிங்கை தவிர, அனைவரும் ஒரே இடத்தில் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, பா.ஜ.,வினர் எந்த எல்லைக்கும்செல்வர். எனவே, எங்கள், எம்.எல்.ஏ.,க்களின் பாதுகாப்பு கருதி, அவர்கள் அனைவரும், பெங்களூரு அருகே உள்ள, ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

எனினும், அவர்களை, கேரளாவின், கொச்சியில் தங்க வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். குதிரை பேரத்தை தவிர்க்கவும், எம்.எல்.ஏ.,க்களின் பாதுகாப்பு கருதியுமே, இந்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து யோசிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள தனியார் சொகுசு விடுதிக்கு அளிக்கப்பட்டுருந்த, போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


எம்.எல்.ஏ.,க் களை பாதுகாப்பது குறித்து, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி கூறியதாவது: குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ள, பா.ஜ.,வினர், எங்கள் எம்.எல்.ஏ.,க்களை மிரட்டி வருகின்றனர். மத்தியில் உள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, எம்.எல்.ஏ.,க்களை மிரட்டி, அவர்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

எனினும், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.தேவை பட்டால், எங்கள், எம்.எல்.ஏ.,க்களை வேறு மாநிலங்களில் தங்க வைக்கவும் தயார். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanathan Balakrishnan - chennai,இந்தியா
18-மே-201818:51:17 IST Report Abuse

Ramanathan Balakrishnanதெலுகு தேச M .L .A க்களை N .T .ராமராவ் காங்கிரஸ் கட்சியிடமிருந்து காப்பாற்ற பெங்களூரு அழைத்து சென்றது இன்னும் மறக்கவில்லை .

Rate this:
nizamudin - trichy,இந்தியா
18-மே-201812:04:57 IST Report Abuse

nizamudinநல்ல வேளை கட்சியை விட்டு வெளியேறவில்லை

Rate this:
Raju - Chennai,இந்தியா
18-மே-201811:04:52 IST Report Abuse

Rajuமோடி'ஸ் மேக் இந்த இந்தியா now Wake in Indian People

Rate this:
Raju - Chennai,இந்தியா
18-மே-201811:02:08 IST Report Abuse

Rajuமோடி'ஸ் மேக் இந்த இந்தியா now Wake in india What a shame

Rate this:
thiru - Chennai,இந்தியா
18-மே-201811:30:14 IST Report Abuse

thiruமோடி கேங் இனி "கேடி" கேங் என்று அழைக்கப்படும்.....

Rate this:
பிரபு - மதுரை,இந்தியா
18-மே-201810:45:54 IST Report Abuse

பிரபுபெரும்பான்மைக்காக கட்சிகள் கூட்டு சேர்ந்தால் தப்பு. ஆனால் அடுத்த கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுத்தால் தப்பில்லை. இது என்ன நியாயம்?

Rate this:
skv - Bangalore,இந்தியா
18-மே-201809:28:43 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>கூவாத்தூர் போறானுகளா இல்லே குழுமபி=நாளை சிம்லான்னுபோறானுகளா எல்லாம் நேர்மை சாத்தியம்னு இருந்தால் ஒழுங்கக மனஉறுதியுடன் பிஜேபி க்கு ஆதரவுத்தரலாமா மாநிலம் நன்னாயிருக்குமே காங்கிரசை நம்பினால் அவ்ளோதான் நன்னாவே மாற்றுவானுங்க ஜாக்கிரதை சசியைநம்பி கூவத்தூர் போனானுகளே கூமுட்டைகள் என்னாச்சு எபிஸ்க்கு வெட்கமே இல்லே சசிகால்லேவீழ்ந்து சேவிச்சு சீ எம் ஆயிட்டாப்பல நீரெல்லாம் அவமானம் போடணுமா அதுக்கு நேரிடையாகவே பிஜேபி க்கு ஆதரவு தங்களேன் குமாரசாமியும் பிராடுதான் தேவேகௌடாவும் பிராடுதான் அதுகளை நம்பும் நீங்களும் பிராடுகளா ஊரை ஏமாத்தி நாட்டை அழிக்கமுயலும் கரையான்களா

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
18-மே-201808:49:56 IST Report Abuse

balakrishnanஒரு ஜனநாயக நாட்டில் தங்கள் உறுப்பினர்கள் விலை போய்விடுவார்கள் என்று அஞ்சி அவர்களை கடத்தி செல்வதும், அவர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதும் எதிர்கால இந்தியாவிற்கு ஒரு நல்ல விஷயமாக இல்லை, நிலைமை இப்படி இருந்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும், லஞ்சத்தை ஒழிக்க முடியும், கருப்பு பணத்தை எப்படி ஒழிக்க முடியும், படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பது போல இருக்கு

Rate this:
sam - Doha,கத்தார்
18-மே-201809:13:19 IST Report Abuse

samஇது தான் இன்றைய ராமராஜ்யத்தின் லட்சணம். ஊழலை ஒழிப்போம், கள்ளப்பணத்தை ஒழிப்போம் என்று கூறி மக்களுடைய நல்ல பணத்திற்கே வெட்டு வைக்கும் ஆட்சி தான் இன்றைய நிலையில் உள்ளது. இவர்களை நம்பி மக்கள் மாற்றி 2014 யில் ஒட்டு போட்டதற்கு இது தான் இவர்கள் கொடுக்கும் வெகுமதி...

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
18-மே-201809:40:35 IST Report Abuse

கைப்புள்ளஅவங்க எல்லோரும் பா.ஜ.க வுக்கு ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களை ஏன் தடுக்கிறீர்கள்? ஏன் காங்கிரஸ் இப்படி ஆட்களை ஆட்டு மந்தை போல நடத்துகிறது. அவர்களுடைய மனசாட்சிப்படி அவர்களை நடக்க விடுங்கள். உங்க கட்சி எம்.எல்.ஏ என்பதற்காக இப்படி அவர்களை மனசாட்சிக்கு விரோதமாக ஒரு குற்றம் செய்ய தூண்டுவது முறையான செயலா? இப்படி எல்லாம் செஞ்சுக்கிட்டே இருந்தீங்கன்னா எப்போதான் இந்தநாட்டில் நல்லதுகள் நடக்கும்? எப்போதான் திருந்துவீங்களோ? உங்கனால் எப்போ பாத்தாலும் ஒரே தொல்லையா இருக்கு....

Rate this:
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
18-மே-201807:43:54 IST Report Abuse

Sankar RamuMLA க்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பாதீர்கள். ஸ்டாலின் இங்க ஆட்சி அமைக்கக்கோருவர்.

Rate this:
skv - Bangalore,இந்தியா
18-மே-201806:41:15 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>நாட்டை செழிக்க வைக்கவே தான் பிஜேபி அரும்பாடு பட்டாலும் பலகூமுட்டைகள் வேண்டும் என்றே பிஜேபி யை அசிங்கமா பேசுறீங்களே வெட்கமாயில்லே மக்களிடம் கேட்டுண்டுதான் சொல்றேன் பலரும் பிஜேபியேதான் என்று சொல்லுறாங்களே அவாள்ளாம் கூமுட்டைகளா

Rate this:
Rajasekar - Trivandrum,இந்தியா
18-மே-201809:59:58 IST Report Abuse

Rajasekarஅப்புறம் எதுக்கு தேர்தல் நடத்துனாங்க???? உங்ககிட்ட கேட்டுட்டு பிஜெபி யை ஆட்சி அமைக்க சொல்லியிருக்கலாம்ல..... செய்யறது திருட்டுத்தனம் அதுக்கு விளக்கம் வேற.... தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் பணமும், வோட்டிங் மெஷின் திருத்தமும் செய்யப்பட்டதுதான் இந்த வெற்றிக்கு காரணம்னு பேசிக்குறாங்க........

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-மே-201806:08:59 IST Report Abuse

Sanny 2014 இல் மோடிஜிக்கு இருந்த மதிப்பு, அமித்ஷா என்ற தளபதியின் சூழ்ச்சிகளால் மறைக்கப்படுகிறது,

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement