ராகுல் கருத்துக்கு அமித் ஷா பதிலடி Dinamalar
பதிவு செய்த நாள் :
ராகுல் கருத்துக்கு அமித் ஷா பதிலடி

புதுடில்லி: ''கர்நாடகாவில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலை யில், பா.ஜ.,வைச் சேர்ந்த எடியூரப்பா, முதல்வர் பதவி ஏற்றுள்ளதன் மூலம், ஜனநாயகம் கேலிக்கூத்துக்கு ஆளாகியுள்ளது,'' என, காங்., தலைவர் ராகுல், கருத்து தெரிவித்துள்ளார்.

 ராகுல், கருத்துக்கு, அமித் ஷா, பதிலடி


இது குறித்து, காங்., தலைவர் ராகுல் மேலும் கூறியதாவது:கர்நாடகாவில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த எடியூரப்பா, முதல்வராக பதவி ஏற்றுள்ளதன் மூலம், ஜனநாயகம் கேலிக்கூத்துக்கு ஆளாகி உள்ளது.

இன்றைய காலைப் பொழுதில், தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆனதை பா.ஜ.,வினர் கொண்டாடும் நிலையில்,

ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்காக, நாட்டு மக்கள் துக்கம் அனுஷ்டிப்பர்.நாட்டின் அனைத்து துறை அதிகாரங்களையும், கைப்பற்றும் முயற்சி யில், பா.ஜ.ஈடுபட்டு உள்ளது. ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டிய துறைகளில், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தலையீடு அதிகரித்துள்ளது.

நீதித் துறை, ஊடகம் மட்டுமின்றி, பா.ஜ., - எம்.பி.,க் கள் கூட, பயத்தில் உள்ளனர். அனைவருமே, மோடி முன், ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் தவிக் கின்றனர்; அந்த அளவுக்கு அச்சப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

காங்., தலைவர் ராகுலுக்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.இது குறித்து, அமித் ஷா, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளதாவது: அரசியல் ஆதாயத்துக்காக,ம.ஜ.த.,வுக்கு ஆதரவளித் ததன் மூலம், கர்நாடக மக்களுக்கு, காங்கிரஸ் மிகப் பெரிய துரோகம் செய்துள்ளது.

சந்தர்ப்பவாதத்துடன் காங்கிரஸ் செயல்பட்ட அந்த வினாடியே, ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு விட்டது. காங்கிரசாரின் இந்த செயல் வெட்கப்படக் கூடியது. நடந்து முடிந்த தேர்தலில், மக்கள் யாரை

Advertisement

ஆதரித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தேர்தலில், 104 இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவி ஏற்பது தவறு என்றால், வெறும், 37 இடங் களில் வெற்றி பெற்ற ஒருவரை முதல்வராக ஆக்க நினைக்கும் காங்கிரசின் செயல் சரியானதா.

காங்., மீது மக்கள் நம்பிக்கை இழந்ததாலேயே, அவர்கள் வெறும், 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ம.ஜ.த., பல இடங்களில் டிபாசிட் இழந்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (29+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மே-201815:46:06 IST Report Abuse

Pugazh Vபல இடங்களில் காங்கிரஸ் டெபாஸிட் இழந்ததா? பச்சை பொய். ஆனால் பிஜேபி டெபாஸிட் இழந்தது 29 இடங்களில். அதாவது 13% தொகுதிகளில் பிஜேபி மக்கள் நம்பிக்கையினை இழந்து விட்டதை மறைக்கிறார்கள்

Rate this:
18-மே-201813:30:58 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்கைப்புள்ளை எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. யாரோ அட்மின் இந்த பதிவுகளை போட்டு ராகுல் இதை செய்வதாக நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர் வெளிநாட்டில் இருக்கிறார் போலும்.

Rate this:
nizamudin - trichy,இந்தியா
18-மே-201811:42:00 IST Report Abuse

nizamudinஅப்போ மக்கள் உங்களுக்கும் முழு வெற்றி தராமல் இருப்பதும் உண்மை ///// மறு தேர்தலுக்கு ஆதரவு தாருங்கள்

Rate this:
பிரபு - மதுரை,இந்தியா
18-மே-201810:55:27 IST Report Abuse

பிரபுகட்சிகள் சேர்வது ஜனநாயக படுகொலை என்றால், அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுப்பது, அவர்களின் கால்களில் விழுவது என்பது பதவிக்காக பிச்சை எடுப்பது போன்றதல்லவா அமித் ஷா அவர்களே? இதை விட கேவலம் என்ன?

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
18-மே-201809:46:00 IST Report Abuse

 ஈரோடுசிவாஜனநாயகம் என்ற வார்த்தை யை கூட உச்சரிக்க தகுதியில்லாதவர்கள் கான்கிராஸ் கும்பல் .... இருப்பதிலேயே அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி தான் ஆட்சி அமைக்க அழைக்கப்படும் .... இதுதான் நடைமுறை .... அப்படியிருக்கையில் எதிரியான தேவகவுடவுடன் கைகோர்த்து கொண்டு ... அதிலும் , முப்பத்தேழு சீட்டு காரனை கூசாமல் முதல்வராக்குகிறேன் என்று ஆசைகாட்டி ஆட்சியமைக்க உரிமை கோறுவதும் ... சட்ட படி சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி ஆட்சி அமைக்கும் பாஜகவை குற்றம் சொல்வதும் பக்கா மோசடித்தனம் என்பது பப்பு வுக்கு தெரியாது ....

Rate this:
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
18-மே-201818:26:06 IST Report Abuse

Gokul Krishnanஅப்படி என்றால் மணிப்பூரில் காங்கிரஸ் தான் அதிக இடங்களை வென்றது , அங்கு மட்டும் ஏன் பீ ஜே பி ஆட்சி அமைக்க அனுமதிக்கப்பட்டது...

Rate this:
sam - Doha,கத்தார்
18-மே-201809:08:50 IST Report Abuse

samஎப்பா உங்கள் கட்சி 29 இடத்தில் டெபாசிட் போன பிறகு, எங்களுக்கு கர்நாடக மக்கள் அதிகம் ஒட்டு போட்டார்கள் என்ற பச்சை பொய்யை சொல்வதை விட ராகுல் சொல்வதில் தான் உண்மை உள்ளது. ஆனால், உங்களையும் அறியாமல் ஒரு நல்ல காரியம் செய்துளீர்கள். கீரியும், பாம்பும் போல் இருந்த எதிர் கட்சிகளை ஒன்றாகி விட்டர்கள். இனி 2019 யில் ஹனி தான்.

Rate this:
B.s. Pillai - MUMBAI,இந்தியா
20-மே-201813:35:46 IST Report Abuse

B.s. PillaiThey are still porcupine/snake ( Keeri-Pambu ) only. Now it is suppressed for the time being to gain minister posts. for the defeated Congress. We can enjoy the in fighting ,once dissident MLAs start pulling the legs. What congress is going to do when Kumarasamy stops Cauvery water to Tamilnadu is to wait and see. Whether it will support and lose Tamil Nadu or raise voice against the remote control C.M. ? If he does not obey the remote control orders, he will be toppled in 6 months time. So there will be election in Karnataka, along with Parliament elections. Till then, Governor will rule Karnataka. So congress 6 months and BJP ( through ) Governor 6 months. matter equalised....

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
18-மே-201808:36:50 IST Report Abuse

balakrishnanவாதமே சரியில்லை, தேர்தலுக்கு பின்பு இரு கட்சிகள் சேர்ந்து எடுக்கும் முடிவு அந்தந்த கட்சிகளின் சொந்த முடிவு, எடியூரப்பாவுக்கு எண்ணிக்கை தான் அதிகம் ஆனாலும் தனிப்பெரும்பான்மை பெற்றுவிடவில்லை, அப்படி தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது, வாக்குகள் சதவிகதமும் எடியூரப்பாவுக்கு குறைவு, ஆட்சி அமைக்க தேவையான உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத சூழலில், அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க சட்டத்துக்கு புறம்பான வழிகளில் தான் ஈடுபடவேண்டும், அதை நியாயப்படுத்துவது மிக மிக தவறான ஒரு அணுகுமுறை

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மே-201809:52:28 IST Report Abuse

Kasimani Baskaranவாக்குச்சதவிகிதத்தை வைத்து கணக்குப் பார்ப்பது தேர்தல் நடைமுறையில் இல்லை.. திமுக வாதம் வெல்லாது......

Rate this:
natarajan s - chennai,இந்தியா
18-மே-201808:27:27 IST Report Abuse

natarajan s1977 வரை காங்கிரசை எதிர்த்து யாராலும் ஆட்சிக்கு வர முடியவில்லை. 1977 இல் ஜனதா ஆட்சி வந்ததும் இந்திராவுக்கு பொறுக்க முடியவில்லை ராஜ் நாராயண் மற்றும் சரண் சிங் போன்றோரை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி அதற்கு சஞ்சீவ ரெட்டியும் துணை, மொரார்ஜி தேசாய் அரசை கவிழ்த்தார் அதெற்கு பின் அவரது மறைவுக்கு பின்னும் ராஜிவ் காந்தியால் அரசை திறம்பட நடத்த முடியாமல் 48 முறை அமைச்சரவையை மாற்றி அமைத்தார், இலங்கை பிரச்சினையில் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து 1500 இந்திய வீரர்கள் கொல்லப்படுவதற்கு காரணமானார் அதற்கு பின்னும் காங்கிரஸ் ஆட்சியில் தொடர எல்லாவிதமான ஜனநாயக படுகொலைகளையும் செய்துதான் ஆட்சியில் இருந்தது. 2004 - 2014 சூனியக்காரியின் கண்ணசைவில் ஆட்சி அப்போது இவர்கள் செய்யாத ஜனநாயக படுகொலையா? M G R இறந்தவுடன் ஜெயாவுக்காக இங்கு நடத்தப்பட்ட ஜனநாயக படுகொலைகளை மறந்து விட்டு எல்லோரும் பேசுகிறோம். ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு கட்சி என்றால் அது காங்கிரஸ்தான்.யார் வந்தாலும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று எழுத படாத விதியை வைத்து ஒரு NON CONGRESS அரசைகூட விட்டு வைக்காத கட்சி இது. பல ஆண்டுகளுக்கு முன் ஹரியானாவில் பன்சிலால் ஆட்சி அமைத்த அடுத்த நாளே அனைவரையும் காங்கிரஸ் கட்சிக்கு அணி மாறவைத்த பெருமை உள்ள கட்சி. கொஞ்சம் சரித்திரத்தை புரட்டி பாருங்கள் தெரியும். காஷ்மீரில் இவர்கள் எத்தனைமுறை ஜனநாயக படுகொலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.தெரியும். பப்புவுக்கு முகம் வேண்டும் (அவர் எங்கு சென்றாலும் தோல்வி என்ற பெயரை மாற்ற) அதற்கத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

Rate this:
Arasu - Ballary,இந்தியா
18-மே-201810:11:23 IST Report Abuse

Arasuஅதனுடைய பழைய செயல்களின் பின் விளைவுகள் தான் இப்போது காங்கிரஸ் எதிர்கொள்கிறது...

Rate this:
s mani - bhavani,இந்தியா
18-மே-201808:13:33 IST Report Abuse

s maniஅமித்ஷா மகா புத்தி கோவா, மேகாலயா, பீகார் போன்ற இடங்களில் நீங்கள் வேண்டாம் என காங்கிரஸ் உங்களை காட்டிலும் பரவாயில்லை என்ற நோக்கில் உங்களை காட்டிலும் அதிக இடம் பிடித்தது. ஆனால் நீங்கள் மைனாரிட்டி யாக இருந்து இன்னும் தங்களது மத்திய அரசை பயன்படுத்தி மற்றவர்களை மிரட்டி ஆட்சி பிடித்தீர்களே அப்போது தெரியவில்லையா ஜனநாயகம் அழிக்க படுகிறது என. வடிவேலு பாணியில் கேட்கிறேன் உங்களுக்கு அடிபட்டு இரத்தம் வந்தால் அது இரத்தம், அதே அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சாரா. பெண்கள் சொல்வார்கள் தான் (மருமகள்)ஊடைத்தாள் பொன் குடமும் மண் குடம், மாமியார் உடைத்தால் மண் குடமும் பொன் குடம் என்று. நீ யெல்லாம் பேசுவதற்கு தகுதி இல்லாதவன்.

Rate this:
nandaindia - Vadodara,இந்தியா
18-மே-201812:54:56 IST Report Abuse

nandaindiaநண்பரே, கோவாவில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸ் அருதி பெரும்பான்மை பெற்ற கட்சி என்ற முறையில் கவெர்னெர் மாளிகை செல்லாமல் எனக்குதான் முதல்வர் பதவி என அவர்களுக்குள் அடித்து கொண்டது ஏன். அதை பாஜாகாவா செய்ய சொன்னது. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் அடித்து கொண்ட போது பாஜக அதை பயன்படுத்தி கொண்டு பிற கட்சிகளை சேர்த்து ஆட்சி அமைத்தது. நீங்கள் சொன்னது போல் பாஜகவோ மத்திய அரசோ மற்றவர்களை மிரட்டியிருந்தால் இப்போது நீதி மன்றத்தை அணுகியது போல அப்போதும் அணுகியிருக்கலாமே. ஏதோ ஒன்று சொல்லி உங்களுக்கு பாஜகவை குறை சொல்லவேண்டும், இல்லையா???...

Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
18-மே-201807:22:25 IST Report Abuse

சூரிய புத்திரன்தாத்தா, பாட்டி, அப்பன் மற்றும்.இன்றைய காலம் வரை ஊழலை ஊட்டி வளா்த்து நாட்டை சீரழித்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நொித்து படுகுழியில் புதைத்த கான்கிராஸ் கட்சிக்கு ஜனநாயத்தை பற்றி பேச சற்றும் அருகதையில்லை. நாட்டை அன்னிய அழிவு சக்தி கான்கிராஸிடம் இருந்து மீட்டெடுக்க பா.ஜ.க நடத்தும் தா்மயுத்ததை தேசபக்தா்கள் வரவேற்கிறோம். கான்கிராஸ் நாட்டை விட்டு விரட்டப்படும் நாளே இந்தியாவிற்கு பொன்னால். ஜெய்ஹிந்த்...

Rate this:
Nanjilaan - Bangalore,இந்தியா
18-மே-201818:10:50 IST Report Abuse

Nanjilaanஅது சரி...அதே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உங்கள் கட்சியில் பதவியில் உள்ளனரே....அவர்கள் எப்போது எப்படி தேச பக்தர்கள் ஆனார்கள் என்று கொஞ்சம் விளக்குங்களேன் ....ஓஹோ தேச பக்தர்கள் கட்சியில் சேர்ந்த வுடன் அவர்கள் வெள்ளையாகி விட்டார்கள் அப்படி தானே? Emergency நேரத்தில் உங்கள் கட்சி MP யின் கணவர் தானே அப்பா ஆடாத ஆட்டம் ஆடினார் என்று சரித்திரம் சொல்லுகிறது.......

Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
19-மே-201806:32:06 IST Report Abuse

சூரிய புத்திரன்அதே குடும்பத்துல தன்னோட அரசியல் லாபத்துக்காக பதவி வெறியால் சொந்த மகனையே கொன்று அதிகாரத்தில் இறுக்கமாய் அமர்ந்து கொடண்டவரோடும், அவரது கட்சியோடும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தனித்து வந்து இன்றளவும் தனித்து நின்று போராடும். கங்கிராஸ் ஊழல் காசை காலால் எட்டி உதைத்து விட்டு தன்மானத்தோடு வாழும் அந்த தாயை பற்றி என்ன தெரியும் உமக்கு....

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement