1 லட்சம் ரேஷன் கார்டுகள் வாங்காமல் அலட்சியம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1 லட்சம் ரேஷன் கார்டுகள் வாங்காமல் அலட்சியம்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரேஷன் கடைகளில், ஒரு லட்சம் பேரின், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் தேங்கிஉள்ளன.தமிழகத்தில், 'ஆதார்' எண் அடிப்படையில், 1.95 கோடி பேருக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ரேஷன் கார்டு கோரி, பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கான, கார்டுகள் அச்சிடப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உரியவர்கள் வாங்காமல், அலட்சியம் காட்டி வருகின்றனர்.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளுக்கு, ஸ்மார்ட் கார்டு அனுப்பி உள்ள விபரம், பயனாளிகளின், அலைபேசி எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ஏற்கனவே கார்டு வைத்திருந்து, சரியான விபரங்களை தாமதமாக தந்தவர்கள், புதிய கார்டு கோரியவர்கள் என, ஒரு லட்சம் பேரின், ஸ்மார்ட் கார்டுகள், கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த கார்டுகளை, உரியவர்கள் உடனே பெற்று கொள்ள வேண்டும். இல்லையெனில், ஊழியர்கள், தவறு செய்ய வாய்ப்புள்ளது. கார்டுதாரர்கள், அலட்சியமாக இருக்கும் போது, தவறு செய்யும் ஊழியர்கள் மீது, எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை