தலைமை ஆசிரியை வழக்கு: பள்ளியை தரம் உயர்த்த தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தலைமை ஆசிரியை வழக்கு: பள்ளியை தரம் உயர்த்த தடை

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, தலைமை ஆசிரியை வழக்கால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்துார் அரசு பள்ளியை தரம் உயர்த்தஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.கலியாந்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை ரமாமணி தாக்கல் செய்த மனு:கலியாந்துார் நடுநிலை பள்ளியை, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த சிவகங்கை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர்பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரைத்தார்.தரம் உயர்த்த அருகே 5 கி.மீ.,சுற்றளவில் உயர்நிலை பள்ளி இருக்கக்கூடாது. தரம் உயர்த்த வேண்டிய பள்ளியில் எட்டாவது வகுப்பில் 50 மாணவர்கள் படிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தகுதிகளை அரசு நிர்ணயித்துஉள்ளது. அருகே 3 கி.மீ.,துாரத்தில் அல்லிநகரத்தில் அரசு மேல்நிலை பள்ளிஉள்ளது. கலியாந்துார் பள்ளியில் எட்டாவது வகுப்பில் 16 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கானதகுதிகளை கலியாந்துார் பள்ளி பெற்றிருக்கவில்லை. தரம் உயர்த்தத் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு ரமாமணி மனு செய்தார்.நீதிபதி அனிதா சுமந்த் தடை விதித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை