இன்ஜி., பதிவு கட்டணம் 'டிடி'யாக செலுத்தலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., பதிவு கட்டணம் 'டிடி'யாக செலுத்தலாம்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு கட்டணத்தை, 'டிடி' எனும் வங்கி வரைவோலையாக வழங்கலாம்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின், இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட அறிவிப்பு:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவுக்கு, பொது பிரிவுக்கு, 500 ரூபாய்; சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 100 ரூபாய்; மற்றவர்களுக்கு, 250 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை, 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்' முறைகளில் செலுத்தலாம்.மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 'டிடி'யாகவும் செலுத்தலாம். அண்ணா பல்கலையின், 42 உதவி மையங்களில், 'டிடி'க்கள் பெறப்படும். 'செயலர், தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை, அண்ணா பல்கலை' என்ற பெயரில், 'டிடி' எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை