பதிவுத்துறையில் திண்டுக்கல் புதிய மண்டலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவுத்துறையில் திண்டுக்கல் புதிய மண்டலம்

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை மண்டலத்தை இரண்டாக பிரித்து, திண்டுக்கல்லை தலைமையிடமாக வைத்து, புதிய மண்டலம் உருவாக்க, பதிவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.பதிவுத்துறை, நிர்வாக ரீதியாக, ஒன்பது மண்டலங்கள், 50 பதிவு மாவட்டங்கள், 568 சார் பதிவாளர் அலுவலகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை, கோவை மண்டலங்களுக்கு அடுத்தபடியாக, மதுரை மண்டலத்தில், 102 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதனால், நிர்வாக ரீதியான கண்காணிப்பு சிரமமாகிறது. இதை கருத்தில் வைத்து, மதுரை மண்டலம், இரண்டாக பிரிக்கப்பட உள்ளது.பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மண்டலத்தில், அதிக எண்ணிக்கையில், சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காக, திண்டுக்கல்லை தலைமையிடமாக வைத்து, புதிய மண்டல அலுவலகத்தை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
18-மே-201809:02:22 IST Report Abuse
natarajan s நிர்வாக வசதி என்றால் ஒழுங்காக பங்கு வருகிறதா என்று கண்காணிக்கவா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை