பா.ஜ.,வுக்கு தாவுகிறாரா வைத்திலிங்கம் மத்திய அமைச்சருடன் சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுக்கு தாவுகிறாரா வைத்திலிங்கம் மத்திய அமைச்சருடன் சந்திப்பு

Added : மே 17, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பா.ஜ.,வுக்கு தாவுகிறாரா வைத்திலிங்கம் மத்திய அமைச்சருடன் சந்திப்பு

தஞ்சையைச் சேர்ந்த, அ.தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., வைத்திலிங்கமும், மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணனும் தனியாக சந்தித்து பேசியதை தொடர்ந்து, வைத்திலிங்கம், பா.ஜ.,வுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். முன்னாள் அமைச்சரான அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும், அ.தி.மு.க.,வின் நால்வர் அணியில், ஒருவராகவும் இருந்தார். 2016 சட்டசபை தேர்தலில், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கம், தி.மு.க., வேட்பாளரிடம் தோற்றார்.பின், அவருக்கு ராஜ்யசபா, எம்.பி., பதவியை ஜெயலலிதா கொடுத்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில், வைத்திலிங்கத்துக்கு முக்கியத்துவம் குறைந்தது. இதனால், அவர் சற்று ஒதுங்கி வருகிறார்.இந்நிலையில், தஞ்சைக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, நேற்று காலை, 10:00 மணிக்கு, சுற்றுலா மாளிகையில் வைத்திலிங்கம் சந்தித்தார். இருவரும், ஒரு மணி நேரத்துக்கு மேல், தனியாக பேசினர். இதனால், வைத்திலிங்கம், பா.ஜ.,வில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின. வைத்திலிங்கம் கூறுகையில், ''தஞ்சைக்கு வந்த மத்திய அமைச்சரை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்,'' என்றார்.முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள வைத்திலிங்கத்தை, தினகரன், திவாகரன் அணிகளுக்கு வரச்சொல்லி நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், பிரச்னை இல்லாமல், பா.ஜ.,வில் இணைந்து விட, வைத்திலிங்கம் முடிவு எடுத்திருக்கலாம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது.ஏற்கனவே, பொன்.ராதாகிருஷ்ணனுடன் நெருக்கம் காட்டிய, நெல்லையைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.,வில் இணைந்தார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
18-மே-201820:30:49 IST Report Abuse
ramasamy naicken ஆண் பாதி, பெண் பாதி மாதிரி, அம்மாவின் அடிமைகள் ஏற்கனவே பாதி காவிகள்தான். இல்லையென்றால் தன் வேட்பாளர்கள் தோற்று டெபாசிட் போனதை பற்றி கவலை பாடாமல், பாரதீய ஜனதா வெற்றி பெற்றதெற்கு வாழ்த்து மடல் அனுப்புவார்களா?
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
18-மே-201810:30:56 IST Report Abuse
நக்கீரன் இவனையெல்லாம் சேர்த்து என்ன பண்றது? பிஜேபிக்குத்தான் நஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
18-மே-201809:38:28 IST Report Abuse
sam வைத்திலிங்கம் ஒரு எக்ஸ்ட்ரா. இவரால் எந்த பிரோயோசனமும் காட்சிகளுக்கு இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X