3 மாநிலங்களில் காங்., போர்க்கொடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது Dinamalar
பதிவு செய்த நாள் :
3 மாநிலங்களில் காங்., போர்க்கொடி
ஆட்சியமைக்க உரிமை கோருகிறது

பனாஜி: கர்நாடகாவில், பா.ஜ.,வை ஆட்சியமைக்க, கவர்னர் அழைப்பு விடுத்ததை அடுத்து, கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் பீஹார் மாநிலங்களில், தங்களை ஆட்சி யமைக்க அழைக்கும்படி, காங்., மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

3 ,மாநிலங்களில், காங்., போர்க்கொடி, ஆட்சியமைக்க ,உரிமை கோருகிறது


கர்நாடகாவில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 224 தொகுதிகளில், பா.ஜ., 104 இடங் களிலும், காங்., 78 மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம்,37 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதில், காங்கிரசும், ம.ஜ.த.,வும் கூட்டணி அமைத்து, தங்களை ஆட்சியமைக்க அழைக்கும்படி, கவர்னர் வஜுபாய் வாலாவிடம் கடிதம் அளித்தன. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற, பா.ஜ.,வும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

இந்நிலையில்,பா.ஜ.,வை சேர்ந்த எடியூரப்பாவை, ஆட்சி அமைக்க, கவர்னர் அழைத்ததால், காங்., மற்றும் ம.ஜ.த., கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.

'தனிப்பெரும் கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டுமெனில், கோவா, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங் களில் தற்போதுள்ள, பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசுகளை கலைத்துவிட்டு, தேர்தலில், தனிப் பெரும் கட்சி யாக வெற்றி பெற்ற,காங்., கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும்' என, காங்., கட்சி கோரியுள்ளது.

அதேபோல், பீஹார்சட்டசபை தேர்தலில், தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்ற, லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என, அந்த கட்சியைச் சேர்ந்த, தேஜஸ்வி யாதவ் கோரி உள்ளார்.கோவா, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களில், ஆட்சி அமைக்க உரிமை கோரி, காங்கிரசும், பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், இன்று, அந்தந்த மாநில கவர்னர்களை சந்திக்க முடிவு செய்துஉள்ளன.

கோவாவில், மொத்தம், 40 தொகுதிகள் உள்ளன. இங்கு, முதல்வர், மனோகர் பரீக்கர் தலைமையி லான, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடக்கிறது. இங்கு, 17 உறுப்பினர்களுடன், காங்கிரஸ் தனிப் பெரும்கட்சியாக உள்ளது. பா.ஜ.,வுக்கு, 13 உறுப்பினர்கள் உள்ளனர்.

வட கிழக்கு மாநிலமான, மணிப்பூரில், 60 தொகுதி கள் உள்ளன. இங்கு, காங்கிரஸ், 28 உறுப்பினர் களுடன், தனிப் பெரும் கட்சியாக உள்ளது. 21

Advertisement

உறுப்பினர்களை வைத்துள்ள,பா.ஜ., கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், ஆட்சியில் உள்ளது. பா.ஜ.,வின் பீரேன் சிங், முதல்வராக உள்ளார். மற்றொரு வட கிழக்கு மாநிலமான, மேகாலயா வில், 60 தொகுதிகள் உள்ளன.

காங்கிரஸ், 21 உறுப்பினர்களுடன், தனிப் பெரும் கட்சியாக உள்ளது. 2 உறுப்பினர்களை வைத்துள்ள, பா.ஜ., தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து, ஆட்சி அமைத்துள்ளது. தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த, கன்ராட் சர்மா, முதல்வராக உள்ளார்.

பீஹாரில், 243 தொகுதிகள் உள்ளன. இங்கு, லாலுவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம், 80 உறுப் பினர்களுடன், தனிப்பெரும் கட்சியாக உள்ளது. 53 உறுப்பினர்களை வைத்துள்ள, பா.ஜ.,வும், 71 உறுப்பினர்கள் உள்ள, ஐக்கிய ஜனதா தளமும், ஆட்சியில் உள்ளன. ஐக்கிய ஜனதா தளத்தின், நிதிஷ் குமார், முதல்வராக உள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (20+ 77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-201813:34:57 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்ஏற்கெனவே பதவியில் ஒரு முதல்வர் உள்ளபோது ஒன்னொரு முதல்வரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பாரா ? காங்கிரேசிற்கு இது தெரியாதா ? எது தின்றால் பித்தம் தெளியும் என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள். கட்சியை மூடிவிட்டு வேறு வேலை பாருங்கள்.

Rate this:

ஸ்ரீனிவாசன்,COIMBATOREவீண் முயற்சி..! காங்கிரஸ் தூங்கிவிட்டு இப்போ குதிக்கிறது... நேற்று சாப்பிட்ட தயிர்சாதத்திற்கு இன்று ஊறுகாய் தொட்டுக் கொள்வது போலிருக்கிறது..!! வெட்கம்..!!!

Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
18-மே-201811:27:42 IST Report Abuse

sankaseshanஜனநாயகம் குறித்து சவுதியில் பேசி பார் நாடு திரும்ப முடியாது உங்களுக்கு இங்குள்ள சுதந்திரம் இசுலாமிய நாடுகளில் கிடைக்காது .50/60 களில் கேரளாவில் மெஜாரிட்டி நம்பூதிரி பாட் அரசை காங்கிரஸ். / இந்திரா கலைத்த போது ஜனநாயகம் இன்று கொலை ,நல்ல நியாயம்

Rate this:
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
18-மே-201810:49:28 IST Report Abuse

மு. செந்தமிழன்பிஜேபி ஆளுகிற மாநிலங்களை ஒரு மேப்பா எடுத்து பாருங்க. அது அந்த காலத்துல அவுரங்கசீப் ஆட்சியில் உள்ளது போல் இருக்கிறது

Rate this:
18-மே-201809:00:25 IST Report Abuse

ஆப்புஅது வேற..இது வேற..அப்பிடி சொல்ல எவ்வளவு நேரமாகும்? பா.ஜ.க கார்ங்க நீதிமான்கள்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
18-மே-201808:26:19 IST Report Abuse

balakrishnanகர்நாடகா ஆளுநர் முடிவின் அடிப்படையில் காங்கிரஸ், லாலு கட்சியினர் போர்க்கொடி தூக்குவதில் நியாயம் இருக்கிறது, ஆனால் வலுவான மத்திய அரசின் விரல் நுனியில் அனைத்து நிர்வாகமும் இருக்கும்போது, இவர்களால் எதிர்த்து போராடமுடியாது

Rate this:
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
18-மே-201810:45:08 IST Report Abuse

Ramachandran  Madambakkamநியாய அநியாயங்கள் ஒரு புறம் இருக்கட்டும். அரசியல் சாசனப்படி முதல் மந்திரி பதவி காலியாக இருக்கும்போது அங்கு ஒருவரை நியமிக்கவே கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆர் ஜெ டி கட்சிகள் முதலாவதாக தற்போது இருக்கும் முதல் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். அதில் அவர்கள் எந்த அளவு வெற்றி பெறுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் முதல் அமைச்சராக உரிமை கோர முடியும்....

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
18-மே-201808:07:51 IST Report Abuse

C.Elumalaiஅகில இந்தியா காங்கிரஸ்க்கு, சோனியா,பப்புலூ எப்போ தலைவர் ஆனார்களோ,அன்றுமுதல் இன்று வரை காமெடி நடவடிக்கை தொடர்கிறது. தலையை விட்டு வாலை பிடிக்கிறது.

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
18-மே-201807:22:07 IST Report Abuse

N.Purushothamanகர்நாடகாவில் பா.ஜ ஆட்சி அமைக்கிறதுக்கு திராவிடால்ஸ் தான் ரொம்பவும் அலட்டிக்கிறாங்க ....கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி வந்தால் காவிரி விஷயத்தில் மிகப்பெரிய முட்டுக்கட்டை ஏற்படும் ...அது தமிழகத்திற்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் ..அங்கு பா.ஜ ஆட்சியில் இருந்த போது உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தண்ணீர் திறந்து விட்டது ஒரு நல்ல வரலாறு ...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
18-மே-201808:29:57 IST Report Abuse

balakrishnanஅங்கே யார் வந்தாலும் நமக்கு பாதிப்பு தான் சார், அதற்குத்தான் காவேரி மேலாண்மை வாரியம், ஆனாலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் மதிப்பில்லாத நாட்டில் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை...

Rate this:
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
18-மே-201807:12:46 IST Report Abuse

கருப்பட்டி சுப்பையா இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை....சித்தராமையா அல்லது வேறு யாராவது காங்கிரஸ் தலைவரின் தலைமையில் அமையும் ஆட்சிக்கு 'நிபந்தனையற்ற' ஆதரவு தருவோம்னு குமாரசாமி கிட்ட இருந்து லெட்டர் வாங்கிட்டு வாங்க....நாங்க விட்டுக் கொடுத்திடறோம்...

Rate this:
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
18-மே-201807:09:08 IST Report Abuse

கருப்பட்டி சுப்பையா கட்சியில ஒரு பப்பு இருந்தா பரவாயில்லை... கட்சி முழுக்க பப்புக்களா இருந்தா எப்படி? பதவியில் இருக்கும் அரசை கவிழ்க்க கவர்னரை சந்திச்சு என்ன பிரயோஜனம் ? சபாநாயகரையல்லவா சந்திக்கனும்? ( நம்பிக்கையில்லாத் தீர்மானம்) நாலு வருஷம் அதிகாரத்தில் இல்லாமல் இருந்ததுலயே மொத்த நட்டும் கழண்டுடுச்சு போல...

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement