புதைத்த பின்னும் பாடாய்ப்படுத்தும் பிணம் கலெக்டர் ஜமாபந்தியில் 'கலகல'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதைத்த பின்னும் பாடாய்ப்படுத்தும் பிணம் கலெக்டர் ஜமாபந்தியில் 'கலகல'

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் லதா தலைமையில் நடந்த ஜமாபந்தியில், புதைக்கப் பட்ட பின்னும் பாடாய்ப் படுத்தும் பிணம் தொடர்பான பிரச்னை வந்ததால் அங்கு சிரிப்பலை எழுந்தது.ஆண்டிச்சியூரணி நெடுங்குளத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன். இவருக்கு சொந்தமான நிலத்தில் இறந்த ஒருவரது உடல் ஆறு மாதங்களுக்கு முன், புதைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பின்பே முருகனுக்கு தெரிய வந்தது.நேற்று அவர் ஜமாபந்தியில் கொடுத்த மனுவில், 'தனது இடத்தில் தவறுதலாக பிரேதத்தை புதைத்தனர். அந்த இடத்தை பயன்படுத்த முடியவில்லை. பிணத்தை தோண்டி எடுத்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,' என தெரிவித்தார்.இதை கேட்டதும் கலெக்டர் மற்றும் அதிகாரிகள், 'மனுவை போலீசாரிடம் கொடுங்க,' என்றனர். போலீசாரிடம் கொடுத்ததற்கு 'மண்ணுக்கு மேலே பிரச்னை என்றால் எங்களிடம் வாங்க; மண்ணுக்கு கீழேனா வருவாய்த்துறையிடம் போங்க என்று திருப்பி அனுப்பிட்டாங்க,' என முருகன் கூறினார். அதைக்கேட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.'வித்தியாசமான மனுவாக இருப்பதால், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுங்கள்' என்று அதிகாரிகளிடம் கலெக்டர் தெரிவித்தார். என்ன செய்வதென தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X