தேக்கடியில் 'ஷட்டர்' பராமரிப்பு தீவிரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேக்கடியில் 'ஷட்டர்' பராமரிப்பு தீவிரம்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தேக்கடியில் 'ஷட்டர்' பராமரிப்பு  தீவிரம்

கூடலுார், பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் தேக்கடி 'ஷட்டர்' பராமரிப்பு பணி நடந்து வருகிறது.ஆண்டுதோறும் பெரியாறு அணையில் உள்ள 13 ஷட்டர்கள், கேலரி மற்றும் தேக்கடி ஷட்டரில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த ஆண்டு ரூ.70 லட்சத்தில் அப்பணிகளை, தமிழக பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர். தற்போது நீர்ப்பிடிப்பில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து உள்ளது.இதனால் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடும் வாய்ப்புள்ளது.அதனால் தேக்கடியில் உள்ள ஷட்டரில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதம் இறுதிக்குள் பணிகள் முடிந்து விடும், என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை