கெமிக்கல் மாசு கண்மாயை தூர்வார தடை உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கெமிக்கல் மாசு கண்மாயை தூர்வார தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, காரைக்குடி அருகே கெமிக்கல் ஆலையால் மாசடைந்தகண்மாயை, பொதுப்பணித்துறை துார்வாரஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.சிவகங்கை மாவட்ட ஆம் ஆத்மி கன்வீனர் அரசு சோமன் தாக்கல் செய்த பொதுநல மனு:காரைக்குடி அருகே கோவிலுாரில் டி.சி.பி.,கெமிக்கல் ஆலை உள்ளது. அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் கோவிலுார் பெரிய கண்மாய் மாசுபட்டுள்ளது. விவசாயம், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையினர் கண்துடைப்பிற்காக கண்மாயை துார்வாரும் பணியில்ஈடுபட்டுள்ளனர். இதற்கு உரிய அனுமதியும் பெறவில்லை. இதனால்மக்கள் பணம் வீணடிக்கப்படும். நிபுணர் குழு அமைத்து கோவிலுார் மற்றும்அருகிலுள்ள பெரியகண்மாய் உட்பட சில நீர்நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும். குழு அறிக்கை தாக்கல் செய்யும்வரைதுார்வார தடை விதிக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக கெமிக்கல் கம்பெனி 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அரசு சோமன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த் அமர்வு: கண்மாயை துார்வார இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ஜூன் 8க்குவிசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை