சான்றிதழ் பெற்றால் உர விற்பனை உரிமம் ஓராண்டு பயிற்சிக்கு பின்பே சான்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சான்றிதழ் பெற்றால் உர விற்பனை உரிமம் ஓராண்டு பயிற்சிக்கு பின்பே சான்று

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திண்டுக்கல், தமிழக உர விற்பனையாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஓராண்டு வேளாண் படிப்பு சான்றிதழ் அளிக்கப்பட உள்ளது.உரம்,பூச்சி கொல்லி மருந்துகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. சில இடங்களில் போலி உரம், பூச்சி மருந்து விற்பனை நடக்கின்றன. இதை தடுக்க மத்திய அரசு புதிதாக உரக்கடை நடத்த உரிமம் கேட்போர், பி.எஸ்சி., வேளாண்மை, வேளாண் பட்டய படிப்பு, வேதியியல் அல்லது மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்களில் 6 மாதம் அல்லது ஓராண்டு சான்றிதழ் பயிற்சி பெறுவது கட்டாயம் என அறிவித்துள்ளது.ஓராண்டு பட்டய படிப்புஏற்கனவே கடை நடத்துவோருக்கு மேற்கண்ட படிப்பு தேவையில்லை. அதே சமயம் எழுத, படிக்க தெரிந்த மற்றும் 10 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக சென்ற ஆண்டு பயிர் சாகுபடி அதிகம் உள்ள திண்டுக்கல், காஞ்சிபுரம் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கியது. 100 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்தாண்டு இத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெற விற்பனையாளர்கள் மாவட்ட வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனரிடம் விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்திற்கு 40 பேர் வீதம்தேர்வு செய்யப்படுவர்.வேளாண் கல்லுாரி, வேளாண் அலுவலகம் அல்லது ஏதேனும் ஒரு மையத்தில் சனி,ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும்.ஒரு வருட படிப்பு கட்டணம் ரூ.25 ஆயிரம். அதில் ரூ.15 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. மீதியை விற்பனையாளர்கள் செலுத்தி பயிற்சி பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X