சிறுமியரிடம் சில்மிஷம் செய்த முதியவர் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியரிடம் சில்மிஷம் செய்த முதியவர் சரண்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை, செங்கம் அருகே, சிறுமியரை கடத்தி, பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட முதியவர், போலீசில் சரணடைந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கல்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின்,12 மற்றும் 8 வயதுடைய, இரு மகள்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், மோட்டூர் கிராமத்தில் உள்ள, அரசு பள்ளியில், படித்து வருகின்றனர்.அவர்களை, கல்தம்பாடியை சேர்ந்த, பச்சையப்பனின் உறவினர், காசி, 60, பெற்றோரிடம் கூட்டிச் செல்வதாகக் கூறி, நேற்று முன்தினம் அழைத்து வந்தார்.அப்போது, அரியாகுஞ்சூர் வனப்பகுதியில், சிறுமியரை பலாத்காரம் செய்ய முயன்றார்.பயந்துபோன ஒரு சிறுமி, அங்கிருந்து தப்பியோடி, பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் வருவதைக்கண்ட காசி, அங்கிருந்து தப்பியோடினார்.புகாரின்படி, செங்கம் போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, போலீசில் காசி சரணடைந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை