காங்கிரஸ் - ம.ஜ.த., கட்சிகள் சூழ்ச்சியை எடியூரப்பா முறியடித்தார்!   Dinamalar
பதிவு செய்த நாள் :
காங்கிரஸ்,ம.ஜ.த.,கட்சிகள்,சூழ்ச்சி,எடியூரப்பா,முறியடித்தாா்

பெங்களூரு: கர்நாடகாவில், பா.ஜ.,வை ஆட்சி அமைக்க விடாமல், காங்., - ம.ஜ.த., செய்த சதித் திட்டங்களை முறியடித்த எடியூரப்பா, 75, நேற்று, மூன்றாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி, வருவாய் துறை செயலருக்கு, முதல் உத்தரவு பிறப்பித்துள்ளார். பா.ஜ., ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., மற்றும் ம.ஜ.த., தலைவர்கள், தலைமை செயலக வளாகத்தில் நேற்று, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ்,ம.ஜ.த.,கட்சிகள்,சூழ்ச்சி,எடியூரப்பா,முறியடித்தாா்


கர்நாடகாவில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஓட்டுப் பதிவு நடந்த, 222 தொகுதிகளில், 104ல், பா.ஜ., வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.அதற்கு அடுத்தபடியாக, காங்., 78 இடங்களிலும், குமாரசாமியின், மதச் சார்பற்ற ஜனதா தளம், 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிற கட்சிகள், மூன்று இடங்களை கைப்பற்றின.

எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்தது. தனிப் பெரும் கட்சி என்ற வகையில், பா.ஜ., ஆட்சி அமைக்க, கவர்னரிடம் உரிமை கோரியது. தேர்தலுக்கு முன், தனித் தனியே போட்டியிட்ட, காங்., - ம.ஜ.த., கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்குப் பின், கூட்டணி அமைத்து, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க, கவர்னரிடம் உரிமை கோரின.

அழைப்பு


சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின், பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பாவை, ஆட்சி அமைக்கும் படி, கவர்னர் வஜுபாய் வாலா, நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த, காங்., - ம.ஜ.த., தலைவர்கள், கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்கக் கோரியும், இரவோடு இரவாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பின், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

எளிய விழா


இதையடுத்து, பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில், நேற்று காலை நடந்த எளிய விழாவில், கர்நாடக முதல்வராக, எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு, கவர்னர் வஜுபாய் வாலா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பா.ஜ.,வை ஆட்சி அமைக்க விடாமல், காங்., - ம.ஜ.த., தலைவர்கள், கடைசி நேரம் வரை, பல தடங்கல்களை ஏற்படுத்தினர். எனினும், அனைத்து தடைகளையும் மீறி, எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடித்து, கர்நாடக முதல்வராக, மூன்றாவது முறையாக, எடியூரப்பா நேற்று பதவியேற்றார்.

முதல்வராக பதவியேற்றதும், முதல் உத்தரவாக, விவசாய கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள், ஒரு லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ள, கடன்களை தள்ளுபடி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி, வருவாய் துறை செயலருக்கு, எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில், எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., தலைவர்கள், தலைமை செயலக வளாகத்தில் உள்ள மஹாத்மா காந்தி சிலை முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர், சித்தராமையா, காங்., மூத்த தலைவர்கள், குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். ம.ஜ.த., நிறுவனர் தேவகவுடா, கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தலைமையில், அந்த கட்சியினரும், போராட்டத் தில் ஈடுபட்டனர். பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைத்த கவர்னருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மாயம்!


கர்நாடக முதல்வர், எடியூரப்பா தலைமையி லான, பா.ஜ., அரசு, சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிக்க, இன்னும், எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறுவதை தடுக்க, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த.,வினர், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, பெங்களூரு அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில், தங்க வைத்து உள்ளனர்.அதேநேரத்தில், காங்.,கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள், ஆனந்த் சிங் மற்றும் பிரதாப் கவுடா பாட்டீல் ஆகியோர், காங்., தலைவர்களுடனான தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும், பா.ஜ., பக்கம் சாய தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களை தவிர, சுயேச்சை, எம்.எல்.ஏ., ஒருவரும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில, எம்.எல்.ஏ.,க்களும் அணி மாறும் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதற்கிடையே, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையின் பெயரில், எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்களை, மத்திய, பா.ஜ., அரசு மிரட்டு வதாக, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமர், 'ஆப்சென்ட்'

எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்க வில்லை. மத்திய அமைச்சர்கள், பிரகாஷ் ஜாவ டேகர் மற்றும் அனந்த குமார் பங்கேற்று, எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


பச்சை சால்வை!

கவர்னர் மாளிகையில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், எடியூரப்பா மட்டும் முதல்வராக பதவியேற்றார். அவருடன் வேறு யாரும் அமைச்சர்களாக பதவியேற்கவில்லை. வெள்ளை சபாரி உடை உடுத்தியிருந்த எடியூரப்பா, தோளில் பச்சை சால்வை போர்த்தியிருந்தார். கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் உறுதிமொழியேற்றார்.


ஒரு நாள் முதல்வர்!

எடியூரப்பா முதல்வராக பதவியேற்றது குறித்து, காங்., செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:எடியூரப்பாவின் முதல்வர் பதவி நீடிக்காது. குறுக்கு வழியில் பதவியை பிடித்துள்ள அவரால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருந் தால், மோடி, அமித் ஷா ஆகியோர், இன்றே பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, எடியூரப் பாவை வலியுறுத்த வேண்டும். அப்படி அவர் செய்தால், நிச்சயம் தோற்று விடுவார். உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்கும் விசாரணைக்குப் பின், கோர்ட் உத்தரவுப்படி, அவர் பதவி விலக நேரிடும். எனவே, அவர் வெறும் ஒரு நாள் முதல்வர் மட்டுமே. பா.ஜ.,வின் அராஜகத்தை எதிர்த்து, நாடு முழுவதும், காங்., சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


'15 நாட்கள் தேவையில்லை' :

கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள, எடியூரப்பா, 15 நாட்களுக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில், தனக்கு அவ்வளவு நாட்கள் தேவைப்படாது என, அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் பதவி ஏற்ற பின், செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப் பில், பா.ஜ., அரசு, 100 சதவீதம் வெற்றி பெறும். பெரும்பான்மையை நிரூபிக்க, 15 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு அவ்வளவு நாட்கள் தேவைப்படாது. எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில், பெரும்பான்மையை நிரூபிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (46+ 445)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Lal - coimbatore,இந்தியா
19-மே-201800:11:47 IST Report Abuse

Ramesh Lalகாங்கிரஸ் சரியாக செய்தால் அது சூழ்ச்சி, பி.ஜெ.பி. கும்பல் தில்லாலங்கடி செய்தால் அது மோடிஜி க்கு கிடைத்த வெற்றி

Rate this:
Raman - Lemuria,இந்தியா
18-மே-201819:29:00 IST Report Abuse

Ramanதேர்தலுக்கு முன்னால் கூட்டணி போடாமல் , தேர்தலுக்கு பின்னர் நம்பர் கணக்கு போட்டு வந்த கூட்டணியை கவர்னர் அழைக்கவில்லை . அடடே

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மே-201815:41:43 IST Report Abuse

Pugazh Vமுதல்வர் ஆகிற தகுதியும் இல்லை. பெரும்பான்மை நிரூபிக்கவில்லை. அதற்குள் 3 I.P.S. ஆபீஸர்கள் இடமாற்றம், லஞ்ச ஒழிப்பு ப்யூரோ சூபரின்டென்டன்ட் மாற்றம், போலீஸ் இன்டெலிஜன்ஸ் தலைவர் மாற்றம். டம்மி பீஸ் களை இந்த இடங்களில் போஸ்ட்டிங் போட்டு விட்டார். இந்த ஆபீஸ் ஆர்டர்கள் செல்லுமா?

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
18-மே-201815:37:34 IST Report Abuse

Appavi Tamilanஹாஹாஹாஹாஹா...மத்தவங்க செஞ்சா சூழ்ச்சி... இவங்க செஞ்சா சரி... என்னங்கடா இது.. என்னதான் அதிகாரம் கையில் இருந்தாலும் இப்படியா அட்டூழியம் செய்வது? ஆடுங்கள்...2019 தேர்தல் வரை ஆடுங்கள். அதற்கு பிறகு அடங்கிப்போவீர்கள்... இன்றைக்கு ஒரே மாநிலத்தில் 29 இடங்களில் டெபாசிட் போனதே இப்படி கேவலம் என்றால் நாளை பொது தேர்தலில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பல பாராளுமன்ற தொகுதிகளில் டெபாசிட் புட்டுக்குமே....அது எந்த அளவுக்கு வலி என்று அன்றைக்கு தெரியும்... உங்களோடு இனி யாரும் கூட்டு சேர மாட்டார்களே... அப்படி தோற்கும்போது அப்போ தெரியும்.. துரோகம் செஞ்சது நேருவா, இந்தியாவா இல்லை அந்த பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றிய கொடியோர் கும்பலா என்று....

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மே-201815:35:59 IST Report Abuse

J.V. Iyerகெட்டவர்களை அழிக்க கெட்டவர்களுக்கு கெட்டவர்களாக மாறத்தான் வேண்டும். பாஜக இதை செய்யும் என்று நம்புவோம்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-மே-201818:05:06 IST Report Abuse

தமிழ்வேல் அப்போ கெட்டவர்களாக மாறியாச்சா ?...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201800:55:48 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அவா அசுராள்.. இவா அய்யர்.. இவா தேவாள்ஸ்..இவா என்ன கொலைபாதகம் பண்ணாலும் பாவமில்லை.கோமியத்தை குடிச்சா போச்சு....

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
18-மே-201815:24:07 IST Report Abuse

Appavi Tamilanமுறியடிச்சாரா? என்ன முறியடிச்சாரு? இது ஒரு அப்பாட்ட ஜனநாயக படுகொலை. ஆளுநரின் மிகப்பெரும் தவறு. ஆட்சியை பிடிக்க பாஜக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் என்பதற்கு இது மேலும் ஒரு சான்று. ஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுபோல் பீஹார், கோவா,மேகாலயா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைக்க கோரியுள்ளதே. அதற்கு பெயர்தான் ஆப்பு. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுதா சங்கீஸ்? நீங்க போட்ட எதேச்சிகார ஆட்டத்தைப்போல மற்ற அனைத்து கட்சிகளும் போட்டால் உங்களுக்கு எப்படி வலிக்கும் என்று நீங்களும் உணரும் காலம் வந்துள்ளது. கோடிகளை கொடுத்து விலைபேசி அராஜக முறையில் ஆட்சியை பிடிக்க கோரத்தாண்டவம் ஆடிய கொடியோர் கும்பலுக்கு இனி தக்க தண்டனைகள் எதிர்வினையாக வரும். இனி என்ன ஆட்டம் போட்டாலும் அதை வைத்து அதற்கு எதிராக இரட்டை ஆட்டம் போட உங்கள் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தயாராகிவிட்டனர். உங்களின் குள்ளநரித்தன சூழ்ச்சியை இனி எதிர்கொள்ள தேவியான விழிப்புணர்ச்சி மக்களிடம் வந்துவிட்டது. இனி என்ன செய்தாலும் ரிவிட் உங்களுக்கே திரும்ப வரும். இதே கருநாடகத்தில் எதோ உங்கள் கட்சி பெரிதாக வளர்ந்துவிட்டதைப் போல மக்களை ஏமாற்ற முயல வேண்டாம். உங்கள் கட்சி தலைவர், பிரதமர், அமைச்சர்கள் என்று பெரும் கும்பலை களம் இறக்கி நீங்கள் வென்றது வெறும் 104 இடங்கள்தான். அதிலும் 29 இடங்களில் டெபாசிட் போய்விட்டதை வசதியாக மறைக்க பார்க்க வேண்டாம். உங்களுக்கு இனி இறங்குமுகம்தான். 2019 தேர்தலில் உங்களுக்கு காத்திருக்கும் படுதோல்விக்கான அச்சாரம் போடப்பட்டு விட்டது. இனி மேடைக்கு மேடை, என்னதான் கத்தி கத்தி பொய்களை பேசினாலும் எடுபடாது. அய்யகோ, அம்மாடியோ என்று அழுது புலம்பி நீலிக்கண்ணீர் நாடகமும் செல்லாது, இப்படி புறவாசல் வழி முறைகேடுகளும் பலிக்காது.

Rate this:
Mal - Madurai,இந்தியா
18-மே-201813:09:34 IST Report Abuse

MalI agree kasimani sir.. If Congress got the support of jds n formed govt, it's fine. But they try to make a party which didn't get people support. Congress is the curse of India.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
18-மே-201813:03:25 IST Report Abuse

ganapati sbஅரசியல் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் மோடி அனந்தகுமார் போல நல்லவர்கள் உள்ளது போல எடியூரப்பா அமித்ஷா போன்ற வல்லவர்கள் பாஜகவில் இருக்க ஆட்சி நிலைப்பது உறுதி

Rate this:
SPB - Chennai,இந்தியா
18-மே-201811:29:56 IST Report Abuse

SPBஅக மொத்தம் மக்களுக்கு உருப்படியா ஒன்னும் பண்ண போறது இல்ல.

Rate this:
Suri - Chennai,இந்தியா
18-மே-201810:34:37 IST Report Abuse

Suriஇந்த நடவடிக்கையை பார்க்கும் பொழுது மிசா காலகட்டத்தை நெருங்குவது போல் உள்ளது. எதேச்சதிகார, சர்வாதிகார அரசர் போல் மோடியும் அமித் ஷா நடந்துகொள்வதை பார்க்கும் பொழுது நடுநிலையாளர்களை விட்டு பீ ஜெ பீ வெகு தூரம் விலகி செல்கிறது.உச்ச நீதிமன்றம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருக்கும் நிலைமையை பார்த்தபின்னும் பதிவியேற்புக்கு தடை வீதிக்காதது வருத்தம் அளிக்கிறது.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement