எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடை விதிக்க மறுப்பு சுப்ரீம் கோர்ட்டில் விடிய விடிய நடந்த விசாரணை Dinamalar
பதிவு செய்த நாள் :
எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடை விதிக்க மறுப்பு
சுப்ரீம் கோர்ட்டில் விடிய விடிய நடந்த விசாரணை

புதுடில்லி: கர்நாடக முதல்வராக பதவியேற்க, பா.ஜ.,வைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு, கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவியேற்க தடை விதிக்கக் கோரியும், காங்., - ம.ஜ.த., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எடியூரப்பா, பதவி ,ஏற்புக்கு, தடை விதிக்க, மறுப்பு ,சுப்ரீம் கோர்ட்டில், விடிய விடிய, நடந்த விசாரணை


விடிய விடிய நடந்த இந்த விசாரணையின் முடிவில், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க, நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.கர்நாடகாவில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, 104 இடங்களில், பா.ஜ., வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளதால், அந்த கட்சியைச் சேர்ந்த, எடியூரப்பாவை, முதல்வராக பதவியேற்கும் படி, கவர்னர் வஜுபாய் வாலா, நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார்.

கவர்னரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., நேற்று முன்தினம் இரவு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அதில், எடியூரப்பாவை முதல்வர் பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளில், அரிதிலும் அரிதான நிகழ்வாக, நேற்று இரவு 2:11 மணிக்கு இந்த வழக்கை, நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர்.நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ. போப்டே மற்றும் அசோக் பூஷண் அடங்கிய சிறப்பு அமர்வு முன், இந்த மனு விசாரணைக்கு வந்தது.

காங்., - ம.ஜ.த., சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், அபிஷேக் சிங்கி வாதிட்டதாவது: எந்த அடிப்படையில், கவர்னர் வஜுபாய், பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார் எனத் தெரியவில்லை.

காங்., - ம.ஜ.த., கூட்டணிக்கு, 117 எம்.எல்.ஏ.,க்களின் பலம் உள்ளது. ஆனால், பா.ஜ.,விடம், வெறும், 104 எம்.எல்.ஏ.,க்களே உள்ளனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க, 112 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவைப்படும்போது, கவர்னரின் இந்த செயல் சரியானதாக தெரியவில்லை. எனவே, எடியூரப்பா, கர்நாடக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும்.

அதே போல், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, எடியூரப்பா, எத்தனை நாட்கள் அவகாசம் கோரினார் எனத் தெரியவில்லை. அவர்களின் கட்சியினர் கூற்றுப்படி, அவர், ஏழு நாட்கள் அவகாசம் கோரியதாக கூறப்படுகிறது.

ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க, எடியூரப்பாவுக்கு, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; இது, குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. கவர்னரின் இந்த செயலால், எம்.எல்.ஏ.,க்கள், விலைக்கு வாங்கப்படக் கூடிய அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார்.

அரசு தரப்பில் வாதிட்ட, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது: எடியூரப்பாவும், கவர்னரும் என்ன பேசினர் எனத் தெரியாது. எடியூரப்பா, கவர்னரிடம் கொடுத்த கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார் என்ற விபரங் களும் தற்போது இல்லை. கவர்னர், எந்த அடிப்படை யில் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார் எனத் தெரியாமல், எதுவும் கூற முடியாது.

இப்படி இருக்கையில், இந்த வழக்கு ஒருபுறம் நடக்கட்டும். எடியூரப்பாவும் பதவியேற்று, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்கட்டும். அதன் பின் வருவதை பார்க்கலாம். அதே சமயம், காங்., - ம.ஜ.த., சார்பில் அளிக்கப் பட்ட, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தில் இடம் பெற்றுள்ள கையெழுத்தின் உண்மை தன்மையில் சந்தேகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி வாதிட்ட தாவது: ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்ற உரிமை, கவர்னருக்கு உண்டு. அவரது அதிகாரத்தில் யாரும் தலையிடுவது நியாயம் ஆகாது. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வை, ஆட்சி அமைக்க அழைத்ததில் தவறேதும் இல்லை.எடியூரப்பா பதவியேற்க

Advertisement

தடை கோரி, இவ்வளவு அவசர அவசரமாக மனு தாக்கல்செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. ஒருவரது பதவியேற்பால், வானம்இடிந்து விழவா போகிறது. இது ஒன்றும் யாருடைய வாழ்வா, சாவா போராட்டம் அல்ல. கவர்னரின் அதிகாரத்தில் தலையிடுவது, ஒருபோதும் நியாயம் ஆகாது.இவ்வாறு அவர் வாதிட்டார்.

முத்தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், எடியூரப்பா முதல்வர் பதவியேற்க தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதே சமயம், எடியூரப்பா, கவர்னரிடம் கொடுத்த கடிதம் மற்றும் எடியூரப்பாவுக்கு கவர்னர் அனுப்பிய கடிதம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.

எடியூரப்பா முதல்வராக பதவியேற்றாலும், அது, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதே என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை, இன்றும் தொடர்ந்து நடக்கவுள்ளது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, நேற்று இரவு 2:11 முதல், 5:28 மணி வரை நடந் தது. இக்கட்டான சூழலில், தங்கள் மனுவை ஏற்று, அதை விசாரித்த, நீதிபதி களுக்கு, அபிஷேக் சிங்கி நன்றி தெரிவித்தார். மனுவை, நீதிபதிகள் உடனடியாக விசாரணைக்கு ஏற்றதன் மூலம், ஜனநாயகம் வென்றுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தில் விடிய விடிய நடந்த இந்த விசாரணை யால், நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. ஏராளமான பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்களும் அங்கு திரண்டதால், நீதிமன்ற வளாகம், திருவிழா நடந்த இடம் போல் காணப்பட்டது.

ராம்ஜெத் மலானி மனு தாக்கல்


கர்நாடக முதல்வராக பதவியேற்கும் படி, எடியூரப்பாவுக்கு, அந்த மாநில கவர்னர், வஜுபாய் வாலா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூத்த வழக்கறிஞர், ராம்ஜெத் மலானி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று அவர் தாக்கல் செய்த மனுவில், கவர்னரின் செயலால், அரசியல் சாசனம் கேள்விக்குறி ஆகியுள்ளதாக கூறினார். இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை, இன்று நடக்கவுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilselvan - chennai,இந்தியா
18-மே-201816:27:15 IST Report Abuse

tamilselvanபா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி வாதிட்ட தாவது: ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்ற உரிமை, கவர்னருக்கு உண்டு. அவரது அதிகாரத்தில் யாரும் தலையிடுவது நியாயம் ஆகாது. தனிப் பெரும் கட்சியாக திரு முகுல் ரோஹத்கி கவர்னர் என்று பதவி எப்படி வந்து தெரியும் இந்தியா சுதந்திரம் அடையாத போது ஆங்கிலேயர் உருவாக்கிய பதவி இன்னம் இந்தியாவில் அந்த பதவி வைத்து கொண்டுருக்கிறோம் கவர்னர் என்பவர் மக்களை தேர்ந்து எடுக்கவில்லை மத்திய அரசு கைப்பாவை அவர் அதிகாரத்தில் தலையிடலாம்

Rate this:
Rajan. - singapore,சிங்கப்பூர்
18-மே-201810:12:23 IST Report Abuse

Rajan. இப்போதெல்லாம் நீதியை எதிர் பார்க்கமுடியாது

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
18-மே-201806:48:30 IST Report Abuse

K.   Shanmugasundararajஎடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்கவில்லை . ஆனால் அதே நேரத்தில் அவர் தனியாகத்தான் பதவி ஏற்க வேண்டும் . பிற அமைச்சர்களை நியமனம் செய்யக்கூடாது.

Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
18-மே-201806:24:57 IST Report Abuse

venkat Iyer.Congress and JDP party not pre poll alliance in the election.Governor able to consider clear majority of any party only able to consider only justified at present situation.

Rate this:
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
18-மே-201806:03:39 IST Report Abuse

Palanisamy Sekarவிடிய விடிய கதை கேட்டு விடிஞ்சபின்ன ராமர் சீதைக்கு சித்தப்பான்னு சொன்ன மாதிரி.. இந்த நீதிபதி இருக்கும் வரை விளங்கிடும் நாடும் நீதியும்..

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
18-மே-201810:25:11 IST Report Abuse

RameshThere are process/procedure in all democracy. As and when a constitutional body is not following then only it is an issue.Each constitutional body is discretion power as well. Supreme Court and HC judges can excercise their discretion power with which they can have a different punishment by justifying the reason even though it is different from Law of this country.As a Common man we may not be knowing all those but Indian constitution has given such type of power. SC Judge can Dismiss/Disqualify President of India whereas SC/HC judges can be impeached only in LS and RS with majority.Governor can call for forming the government in the below priority if there is majority for a single party. 1. Pre Poll Alliance 2.Single Largest Party who stake claims to form the government 3.Post Post Alliance. As there is no Pre Poll alliance in Karnataka, Option 2 is exercised. Governor has followed correct procedure and process only...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மே-201804:28:42 IST Report Abuse

Kasimani Baskaranகவர்னரை பொறுத்தமட்டில் யார் கொடுக்கும் ஆதரவு கடிதத்தில் கையெழுத்து சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்... அதில் என்னை நானே பிரதமராக முன்மொழிகிறேன் என்று இருக்கும் கடிதங்கள் ஜன்னலுக்கு வெளியே வீசப்படும்... கையெழுத்து இல்லாமல் அல்லது போலிக்கய்யெழுத்து என்றால் நிராகரிக்க கவர்னருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது...

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
18-மே-201801:31:52 IST Report Abuse

ramasamy naickenஇந்த வழக்கில் தீர்ப்பு சொல்வதற்குள் எடியூரப்பா ஐந்து வருட ஆட்சியை முடித்து சிவலோக பதவியையே பிடித்து இருப்பார். அவ்வளவு வேகம்.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
18-மே-201801:09:33 IST Report Abuse

அன்புஎந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லையெனில், தேர்தலுக்கு முன் கூட்டணியாக போட்டியிட்ட அணிக்கு முதலாவதாகவும், தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்த அணிக்கு இரண்டாவதாகவும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முன்வராத பட்சத்தில், அதிக உறுப்பினர் கொண்ட கட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சட்டம் ரொம்ப தெளிவாக சொல்கிறது. கவர்னர் வேண்டுமென்றே சட்டத்தை மீறி உள்ளார். இது போன்ற செயல்கள் இந்திய ஜனநாயகத்தை கேலிப்பொருளாக்கிவிடும். ஜனநாயகத்தை கொஞ்சமும் மதிக்காத ஒருவரை, பிரதமர் பதவிக்கு அமர்த்தி அழகு பார்த்ததன் விளைவு, இன்று ஜனநாயகம் சந்திசிரிக்கிறது. ஒரு முறை ஜனநாயகத்தை காக்கும் மரபு உடைந்தால், இனி வரும் மத்திய அரசுகளும் இதே மாதிரி கயவாளித்தனங்களில் ஈடுபடும் தைரியத்தை கொடுக்கும். ஊழல்கள் இப்படித்தான் மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று யாராலும் அழிக்க முடியாத டைனோசராக காட்சி அளிக்கிறது.

Rate this:
Kalyanaraman S - Bangalore,இந்தியா
18-மே-201810:00:58 IST Report Abuse

Kalyanaraman S\\தேர்தலுக்கு முன் கூட்டணியாக போட்டியிட்ட அணிக்கு முதலாவதாகவும், தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்த அணிக்கு இரண்டாவதாகவும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முன்வராத பட்சத்தில், அதிக உறுப்பினர் கொண்ட கட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சட்டம் ரொம்ப தெளிவாக சொல்கிறது....\\ அன்பு மன்னிக்கவும், நீங்கள் சொல்வதுபோல் சட்டம் தெளிவாக சொல்லவில்லை. நீங்கள் சொன்ன அனைத்து scnearios சொல்லப்பட்டு இருந்தாலும், முன்னுரிமை கோட்பாடு (order of priority) தெளிவாக வரையறுக்கப்படவில்லை. அதனால் வந்து குழப்பம் இது....

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
18-மே-201810:26:34 IST Report Abuse

RameshGovernor should call for forming the government in the below priority if there is majority for a single party. 1. Pre Poll Alliance 2.Single Largest Party who stake claims to form the government 3.Post Post Alliance. As there is no Pre Poll alliance in Karnataka, Option 2 is exercised. Governor has followed correct procedure and process only....

Rate this:
S.AJINS - CHENNAI,இந்தியா
18-மே-201800:42:20 IST Report Abuse

S.AJINSசர்வாதிகாரி மோடியின் அடிமை நீதிபதிகள்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement