தனியார் உதவியில் ஏரிகள் சீரமைப்பு உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி தருமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் உதவியில் ஏரிகள் சீரமைப்பு உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி தருமா

Added : மே 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மாநிலம் முழுவதும், 39 ஆயிரத்து, 202 ஏரிகள் உள்ளன. இவற்றில், 14 ஆயிரத்து, 98 ஏரிகள் மட்டும், பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ளன.மீதமுள்ள ஏரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதேபோல, மாநிலம் முழுவதும், ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் சிறிய குளங்கள் உள்ளன.இந்த ஏரிகள் மற்றும் குளங்கள் பராமரிப்பு பணிக்காக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அரசு தனியாக நிதி ஒதுக்குவது கிடையாது.இதனால், பல்வேறு ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புகளால் மாயமானதுடன், குறுகியும் வருகின்றன. இவற்றின் நீர்வரத்து பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில், அவை நிரம்புவது கிடையாது.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக, வடகிழக்கு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால், பல ஏரிகள் மற்றும் குளங்கள் வறண்டு கிடக்கின்றன.பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளை புனரமைக்க, குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு, 1,515 ஏரிகளை புனரமைக்க, 330 கோடி ரூபாய் செலவில் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை சீரமைப்பதற்கு, நிதி ஒதுக்கவில்லை.இந்த ஏரிகளை புனரமைப்பதற்கு, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அனுமதி வழங்க, உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் தயங்குகின்றனர்.எனவே, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை, தனியார் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் புனரமைப்பதற்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
18-மே-201820:22:37 IST Report Abuse
samuelmuthiahraj நிதிகள் ஒதுக்கப்பட்டால் செலவின கணக்கு எழுதி உடனடியாக லபக்கென பணத்தினை சுருட்டி விடுவார்கள் ஏற்கனவே அனைத்து குளங்களும் குட்டைகளும் வாய்க்கால் புறம்போக்குகளும் பஞ்சாயத்துகள் ஆக்கிரமிப்பாளருக்கு விற்றுவிட்டார்கள் உரிய நீளம் அகலம் சரியாக எடுத்து தூர் வரமாட்டார்கள் அரசு பணம் அப்படியே அம்போ ஆகிவிடும் காஞ்சிபுரம் நகரில் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் வீதிகளும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விடடன
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201817:42:49 IST Report Abuse
Bhaskaran அவர்களுக்கு உண்டானாகப்பத்தைகாட்டிவிட்டால்அனுமதி தாராளமாக தருவதில் தடையொன்றும் கிடையாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை