உயிரோடு உள்ளவர் இறந்ததாக அறிவிப்பு| Dinamalar

உயிரோடு உள்ளவர் இறந்ததாக அறிவிப்பு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம், லக்னோவின், ராஜேந்திர நகரைச் சேர்ந்த, கேவ்லா மோகா, 65, மூச்சுத் திணறல் காரணமாக, டாலிகஞ்ச்சில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறிய டாக்டர்கள், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். சிகிச்சை செலவுக்காக, நான்கு லட்சம் ரூபாய் வசூலித்தனர்.இரண்டு நாட்கள் கழித்து, அவர் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து, உடலை, அவரது குடும்பத்தினர், வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு, அவரது கை, கால்கள் அசைந்ததையடுத்து, லக்னோ அரசு மருத்துவமனைக்கு கேவ்லாவை துாக்கிச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாக கூறிய டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, டாலிகஞ்ச் போலீசில், கேவ்லாவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X