மேட்டூர் அணைக்கு 17 நாளில் 1.25 டி.எம்.சி., நீர்வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு 17 நாளில் 1.25 டி.எம்.சி., நீர்வரத்து

Updated : மே 18, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மேட்டூர் அணை, 17 நாள், 1.25 டி.எம்.சி., நீர்வரத்து

கோடைமழையால், மேட்டூர் அணைக்கு, 17 நாட்களில், 1.25 டி.எம்.சி., நீர் வந்துள்ளது.

கோடைகாலம் துவங்கிய நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட வறட்சியால், கடந்த மாதம் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 100 கனஅடிக்கும் கீழே சரிந்தது. ஆனால், மே மாதம் துவக்கத்தில் இருந்து, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், அவ்வப்போது, கோடைமழை தீவிரம் அடைந்து, மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக கடந்த, 9 ல் மேட்டூர் அணைக்கு, வினாடிக்கு, 1,970 கனஅடி நீர்வந்தது. மே மாதத்தில் நடுவர் மன்றம் தீர்ப்பு,உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடகா நீர் திறக்கவில்லை.

இந்நிலையில், கோடைமழை கைகொடுத்ததால், 17 நாட்களில் மேட்டூர் அணைக்கு, 1.25 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. நேற்று அணை நீர்மட்டம், 33.69 அடி, நீர் இருப்பு, 9.03 டி.எம்.சி.,யாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட மலையில் பெய்யும் மழையே, பிரதான நீர்வரத்தாக உள்ளது. அணையில் சேறு, சகதி கழித்து, 105 அடி உயரம் வரை நீர் தேக்கி வைக்க முடியும்.நீர் பிடிப்பு பகுதிகளில், இரு வாரங்களுக்கு முன் பெய்த மழையால், நீர்மட்டம் சற்று உயர்ந்தது.

இந்நிலையில்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மலை பகுதி மற்றும் பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில், இரு நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வனப்பகுதி வழியாக வரும், மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 440 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 1,345 கன அடியாக அதிகரித்தது.நேற்று மாலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 48.84 அடி, நீர் இருப்பு, 4.1 டி.எம்.சி.யாக இருந்தது.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
18-மே-201803:13:09 IST Report Abuse
ramasamy naicken இந்த வருடமும் அணையை தூர் வரவில்லை. சபாஷ் தமிழக அரசு.
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
18-மே-201821:47:44 IST Report Abuse
Rajeshதூர் வாரிட்டா தண்ணிய வெச்சு தொழில் பண்ணமுடியாதே. மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கென்ன,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை