'நடிகை என்பதால் விமர்சிப்பதா': திருநாவுக்கரசருக்கு குஷ்பு பதிலடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நடிகை என்பதால் விமர்சிப்பதா'
திருநாவுக்கரசருக்கு குஷ்பு பதிலடி

சென்னை: ''நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா,'' என காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசருக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை,,விமர்சிப்பதா,திருநாவுக்கரசர் , குஷ்பு பதிலடி


அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இருவரும் வசை மாரி பொழிந்து கொள்கின்றனர்.

தமிழக காங்., தலைவர் விரைவில் மாறப் போகிறார் என சில நாட்களுக்கு முன் குஷ்பு கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக, ''நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் மீது முட்டை ,செருப்பு வீசி,விரட்டி அடித்தனர். அங்கு சும்மா இருக்காமல், வீண் வம்பு செய்த தாலேயே இதெல்லாம் நடந்தது காங்கிரசிலும் அதே நிலையை மேற்கொண்டிருக்கிறார். இங்கும் அவருக்கு அதே நிலை விரைவில் ஏற்படும். அவர் சினிமாவில் நடிக்கட்டும், அரசியலில் நடிக்கத் தேவையில்லை,'' என திருநாவுக்கரசர் சாடி இருந்தார்.

இதையடுத்து, லண்டனில் இருந்த நடிகை குஷ்பு தொலைபேசி மூலம் அளித்த பேட்டி: நான், தமிழக காங்கிரசுக்குள் நடப்பதைத் தான் வெளிப்படையாகதெரிவித்தேன். அரசியலில், ஒளிவு மறைவு இல்லாமல் செயல்படும் சிலரில் நானும் ஒருத்தி. டில்லியில் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து தான், தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என தெரிவித்தேன்.

அது நடக்கப் போவதில்லை என்றால், தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற உயர்ந்த அந்தஸ் தில் இருக்கும் ஒருவர், நாகரிகமாக பேசலாம். அதை விடுத்து, என்னை நடிகை என்பதால், தாறுமாறாக விமர்சிப்பது தவறு.

திருநாவுக்கரசர் ஒரு கட்சிமாறி அவரும், பல கட்சிகளுக்கும் சென்று வந்தவர் தான் என்பதை மறந்து விட்டு, நடக்காத வைகளையெல்லாம், இட்டுகட்டிப் பேசுகிறார். தி.மு.க.,வில் நடந்த சம்பவம் குறித்தெல்லாம், அவர் ஏன் இப்போதுபேச வேண்டும். அவருடைய கடந்த காலங்களை பற்றி நான் பேசவில்லையே.

எந்தக் கட்சியில் இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சி நலனுக்கு உகந்த வகையிலும், தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். கடந்த காலங்களில் எந்தளவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அதற்காக நான் பட்ட கஷ்டங்கள்; உழைப்பையெல்லாம் துச்சமாக மதித்து, விமர்சனம் செய்யும் தலைவருக்கு, சரிக்கு சமமாக லாவணி பாட விரும்பவில்லை.

நான் சொன்ன கருத்துக்கள், தனிப்பட்ட விமர்சனங் கள் அல்ல. கட்சியின் நலனில் அலட்சியம் காட்டப் படுவது குறித்தும், செயல்பாடுகளில் இருக்கும் குறை பாடுகள் குறித்தும் தான் பேசினேன்.மற்றபடி, அவரது விமர்சனங்கள் குறித்து, தலைவர்களிடம் எடுத்துச் செல்லப்படும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் பார்த்துகொள்ளட்டும். அவரது பேச்சுக்கு வரிக்கு வரி பதில் சொல்லி, சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை. இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

தி.மு.க., திடீர் ஆதரவு


திருநாவுக்கரசர் பேச்சை மறுத்தும், குஷ்புக்கு ஆதரவாகவும், தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., -டி.கே.எஸ். இளங்கோவன், நேற்று வெளியிட்ட அறிக்கை:

Advertisement

முட்டை, செருப்பால் அடித்து, தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டவர் குஷ்பு என, திருநாவுக்கரசர் பேசியதாக, செய்தி வெளியாகியுள்ளது.

தி.மு.க.,வில் இருந்த காலத்தில், குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப் பட்டார். தி.மு.க.,வினர் யாரும், குஷ்புக்கு எதிராக, இதுபோன்று, தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டது இல்லை; தாக்கவுமில்லை. அந்தச் செய்தியில், சிறிதும் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லண்டனில் குஷ்பு!


திருநாவுக்கரசர் அவதுாறாக விமர்சித்துள்ளதால், குஷ்பு ஆதரவாளர்கள் கொந்தளித்து உள்ளனர். திருநாவுக்கரசருக்கு எதிராக, கொடும்பாவி எரிக்க, அவர்கள் திட்டமிட்டு ள்ளனர்.

இது குறித்து, குஷ்பு தரப்பில் விசாரித்த போது, அவர், லண்டனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு வார பயணத்தை முடித்து, அவர் சென்னை திரும்பியதும், காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து, திருநாவுக்கரசர் மீது புகார் செய்வார். அதன்பின், தமிழகத்தில், திருநாவுக் கர சருக்கு எதிரான போராட்டத்தில், குஷ்பு தீவிரமாக இறங்குவார் என, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (35+ 40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-மே-201815:02:20 IST Report Abuse

Malick Rajaகாங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வ பிஜேபி வேலை செய்ய வேண்டியதில்லை .. காங்கிரஸ் கட்சி காரர்களே பெட்ரோல் ஊற்றி கட்சியை காலி பண்ணுவார்கள் .. காங்கிரஸ் கட்சியில் சாபக்கேடுகள் நீங்காதவரை உருப்பட வாய்ப்பே இல்லை

Rate this:
Somiah M - chennai,இந்தியா
18-மே-201820:21:47 IST Report Abuse

Somiah Mஅகில இந்திய செய்தி தொடர்பாளர் ஒரு செய்தியை கூறுவது என்றால் அது ஆதார பூர்வமான செய்தியாக இருக்கவேண்டும் .அந்த பதவிக்கு அதுதான் கவுரவம் .அப்படி இல்லாமல் யூகங்களையும் விருப்பங்களையும் மாத்திரமே செய்தியாக்கினால் அந்த பதவியின் மதிப்பை இழந்து விடுவார் .குறைகளை சுட்டிக் காட்டினேன் என்கிறார் இளங்கோவன் தலைவராக இருந்த காலத்தில் இப்படி எல்லாம் சுட்டி காட்டவில்லையே ஏன் ?

Rate this:
shankar - chennai,இந்தியா
18-மே-201817:43:52 IST Report Abuse

shankarஎங்கப்பா நம்ம சீமான காணோம் ஏன் திருநாவுக்கரசர் தமிழன் இல்லையா ஒரு மராட்டிக்காரி தமிழனா திட்டி தீக்கரா தட்டி கேக்காம சும்மா இருக்காரு. இவருதான் நாங்க எந்த கட்சியை சேர்ந்தவங்களா இருந்தாலும் தமிழன்கிற அண்ணன் தம்பிக்கீங்கதான் சொல்வாரே. ஒருவேளை குஷ்பு தமிழச்சி ஆயிட்டாங்களா அப்படின்னா ரஜினியும் தமிழனாக ஆகிருக்கணுமே ஓஹோ குஷ்பு பொம்பளை இல்லையா அதான் தமிழச்சியா ஏத்துக்கிட்டிருப்பாரு.

Rate this:
BALU - HOSUR,இந்தியா
18-மே-201816:55:13 IST Report Abuse

BALUஅஞ்சாநெஞ்சம் கொண்ட குஷ்புவை தமிழ்நாடு காங். தலைவராக்கலாம். அவர் வேண்டுமானால் காங். கட்சியை வளர்க்க வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 234 தொகுதிகளில் தேர்தலில் நிற்கக்கூட ஆளில்லை. ஆமாங்க த.நாடு காங்கிரஸை காப்பாத்த குஷ்புவை விட்டால் வேறு ஆளில்லைங்க. குஷ்பு தலைவரானால் கூட்டம் கூடுங்க. Mr.Ragul. யோசனை செய்யுங்க.

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
18-மே-201816:10:45 IST Report Abuse

mindum vasanthamGautami munnetra kalakam sutru payanam srethe ennaachu

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-201816:06:21 IST Report Abuse

Endrum Indianஒரு வாரம் நடிகையின் பெயர் எந்த பத்திரிக்கை, மீடியாவில் வரவில்லையென்றால் உடனே அவர்கள் வாழ்க்கையில் வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்வார்கள். ஆகவே தான் உன்னை விமர்சிப்பதில் தவறில்லை. அப்படியாவது உன் பெயர் பேப்பரில், மீடியாவில் வருமே. இல்லையென்றால் நீ தற்கொலை செய்து கொள்வாய் என்று தான் இந்த கரிசனம் உன் மீது.

Rate this:
Arasu - Ballary,இந்தியா
18-மே-201813:40:31 IST Report Abuse

Arasuஎப்படியோ அவர்களுக்குள் அடித்துக்கொண்டு போகட்டும் . நல்லது

Rate this:
18-மே-201813:28:39 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்யாருமே நம்மை கவனிக்கவில்லை , நமக்குள்ளேயே சண்டையிட்டாவது நாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள இந்த நாடகம். தலைமை மாற்றப்படுவதாக இருந்தால் மாற்றட்டும் எதற்கு இந்தம்மா முதலில் ஊடகத்தில் சொல்லவேண்டும். நாடகம் போதும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.

Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
18-மே-201813:01:32 IST Report Abuse

பஞ்ச்மணிஅப்போ உங்களுக்கு உங்க மேல confidence இல்லாத மாதிரி பேசறீங்களே இல்லாட்டி அய்யே இப்படி அபத்தமா பேசி மேலிடத்துல வாங்கி கட்டிக்க போறோமேன்னு பயப்படற மாதி தெரியுதே

Rate this:
nizamudin - trichy,இந்தியா
18-மே-201811:59:06 IST Report Abuse

nizamudinகொட்டுவது நெல் அல்ல சொல் ஜாக்கிரதையாக கொட்டுங்கோ??

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement