தேவஸ்தானம் மீது அவதூறு அர்ச்சகருக்கு, 'நோட்டீஸ்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேவஸ்தானம் மீது அவதூறு அர்ச்சகருக்கு, 'நோட்டீஸ்'

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பதி, திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தின் மீது, அவதுாறு கூறிய தலைமை அர்ச்சகர், ரமண தீட்சிதருக்கு, தேவஸ்தானம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.ஆந்திராவில், திருப்பதி, திருமலை தேவஸ்தான தலைமை அர்ச்சகராக உள்ள ரமண தீட்சிதர், சமீபத்தில், சென்னையில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், தேவஸ்தானத்தின் மீது, பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.லட்டு பிரசாத விற்பனை மற்றும் ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மன்னர் காலத்து ஆபரணங்கள் மாயமானதாக கூறினார்.இதுகுறித்து விளக்கம் கேட்டு, தேவஸ்தான நிர்வாகம், அர்ச்சகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:திருமலையில், தலைமை அர்ச்சகராக பணியாற்றும் நிலையில், அண்டை மாநிலமான தமிழகத்துக்குச் சென்று, அவதூறு பேசியது ஏன்? தேவஸ்தானத்தில் பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்து, தலைமை அர்ச்சகருக்கு நன்றாக தெரிந்திருந்தும், அதுகுறித்து பிரச்னை எழுப்பியது ஏன்? இதற்கு கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை