ஐ.சி.எப்.,பில் மெட்ரோவுக்கு பெட்டிகள் ரயில்வே வாரிய தலைவர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.சி.எப்.,பில் மெட்ரோவுக்கு பெட்டிகள் ரயில்வே வாரிய தலைவர் தகவல்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை, ''ஐ.சி.எப்.,பில், மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கப்படும்,'' என, ரயில்வே வாரிய தலைவர், அஸ்வனி லோஹானி கூறினார்.சென்னையில், ரயில்வே வாரிய தலைவர், அஸ்வனி லோஹானி அளித்த பேட்டி:ஐ.சி.எப்.,பில், கோல்கட்டா மெட்ரோ ரயிலுக்கு, 'பிராட் கேஜ்' ரயில் பாதையில் இயக்கக்கூடிய, மெட்ரோ ரயில் பெட்டிகள், தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.சென்னை உட்பட, மற்ற நகரங்களில், மெட்ரோ ரயில்கள் 'ஸ்டாண்டர்டு கேஜ்' தண்டவாளத்தில் இயக்கப்படுகின்றன. இதனால், 'ஸ்டாண்டர்டு கேஜ்' ரயில் பெட்டி மாடல்கள், ஐ.சி.எப்.,பில், தயாரிக்கப்பட்டு, அதன் பின், மெட்ரோ ரயில் பெட்டிகள், தயாரித்து வழங்கதிட்டம் உள்ளது.இதற்காக, இந்தியாவில், ஒன்பது மெட்ரோ ரயில் நிர்வாகங்களுடன், பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்தியா முழுவதும், அனைத்து ரயில்களிலும், இந்தாண்டு டிசம்பருக்குள், பசுமை கழிப்பறை வசதி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.திட்டமிட்ட காலக்கெடுவிற்குள், முழுவதும் முடிக்க சாத்தியமில்லாததால், 2019 மார்ச்சுக்குள், அனைத்து ரயில் பெட்டிகளிலும், பசுமை கழிப்பறை வசதி செய்யப்படும்.தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல், விஷமிகளின் சதிச்செயல், சிக்னல் கோளாறால் எதிரெதிரே ரயில்கள் வந்து மோதும் நிலைகளை தவிர்க்க, ரயில்கள் தடம் புரளாமல் தடுக்க, முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதற்கு, விபத்து தடுப்பு கருவி, ரயில் பெட்டிகளிலும், ரயில் பாதைகளிலும், பொருத்தி, சோதனை நடத்தப்பட்டுள்ளது.முழுமையாக ரயில் போக்குவரத்தில், இக்கருவி இணைப்பு குறித்து முடிவு செய்வதற்காக, தென்மத்திய ரயில்வேயில், ெசகந்திராபாத்தில் உள்ள சிக்னல் ஆய்வு மையத்தில், இக்கருவி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆய்வு முடிவு வந்ததும், இக்கருவிகள், ரயில் போக்குவரத்தில் நிரந்தரமாக இணைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அஸ்வனி லோஹானி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X