ஸ்டெர்லைட் விரிவாக்கம் தடை கோரி வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விரிவாக்கம் தடை கோரி வழக்கு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை கோரிய வழக்கின்தீர்ப்பைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.துாத்துக்குடி பாத்திமா தாக்கல் செய்த பொதுநல மனு: வேதாந்தா நிறுவனத்தின்ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை துாத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ளது. ஆலையால்சுற்றுச்சூழல்மாசுபடுகிறது. சிப்காட்-2 தொழில் பூங்கா வளாகத்தில் ஸ்டெர்லைட் 2 வது யூனிட் துவங்க உள்ளனர்.மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தடையில்லாச் சான்று 2009 ல் வழங்கப்பட்டது. அது 2015 மற்றும் 2016ல் புதுப்பிக்கப்பட்டது. இதில் எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. மக்களிடம் கருத்துக் கோரவில்லை. ஆலையின் 2வது யூனிட் விரிவாக்க கட்டுமானப் பணி மற்றும் மத்திய அரசின் தடையில்லாச் சான்றிற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு பாத்திமா மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த் அமர்வு விசாரித்தது.ஸ்டெர்லைட் வழக்கறிஞர்: மத்திய அரசு 2009 ல் வழங்கிய சான்று மற்றும் அதை புதுப்பித்தது செல்லும் என உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒரே நிவாரணத்திற்குமீண்டும் வழக்குத் தொடர முடியாதுஎன்றார்.நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை