அரசு தடையை வென்று சாதனை: கமல் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு தடையை வென்று சாதனை: கமல் பேச்சு

Added : மே 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அரசு தடையை வென்று சாதனை: கமல் பேச்சு

திருநெல்வேலி, 'நான் கல்லுாரிகளுக்கு செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது, அதை வென்று சாதனை படைப்போம்' என கமல் பேசினார்.மக்கள் நீதி மையம் தலைவர் கமல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று நெல்லை மாவட்டம் பணகுடி வந்தார். பஸ் ஸ்டாண்ட் அருகே வரவேற்பளிக்கப்பட்டது.தொடர்ந்து திசையன்விளை, உவரி வழியாக துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு சென்றடைந்தார்.பின்னர் திருச்செந்துார் சென்ற அவர் பேசுகையில், நம் பாதை ஏற்கனவே முடிவாகிவிட்டது. நமது கட்டமைப்பு என்ன என்பதை கூற கடமைப்பட்டுஉள்ளோம். வழக்கமாக தேர்தல் நெருங்கும்நேரத்தில்தான் அரசியல்வாதிகள் மக்களை சந்திக்க வருவார்கள். ஆனால் நான் என்னை தேற்றிக்கொள்ள, மேலும் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்.காந்தியின் நம்பிக்கைகளில் இருந்து மாறுபட்ட நம்பிக்கையில் இருந்தாலும் பயணத்தில் நான் அவரை பின்பற்றுகிறேன். உங்கள் மதமோ, தெய்வமோ எனக்கு இடைஞ்சல் ஆகாது. மக்களுக்கு பயனளிக்கும் எதையும் மேற்கொள்வேன். நான் கல்லுாரிகளுக்கு செல்வதை தடுத்து நிறுத்த அரசு ஆணை பிறப்பித்துஉள்ளார்கள்.நான் பள்ளிப்படிப்பை கூட சரியாக முடிக்காதவன். நான் கல்லுாரி மாணவர்கள் அழைப்பை ஏற்று அங்கு செல்ல முயன்றால் அரசு தடையை ஏற்படுத்துகிறது. அந்த தடையை வென்று சரித்திரம் படைப்போம் என்றார்.தொடர்ந்து காயல்பட்டணம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், ஏரல் ஆகிய இடங்களில் பேசினார்.

உயிர்பறிக்கும்வியாபாரம்

நேற்று இரவு 7:45 மணிக்கு துாத்துக்குடி பொதுக்கூட்ட மேடையில்கமல் பேசியது:''நாடு வளமாக இருக்க தொழிற்சாலைகள் வரவேண்டியதுதான். ஆனால் லாபம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் மக்களின் உயிர்போனாலும் பரவாயில்லை என செயல்படுத்தப்படும் வியாபாரம் தேவையில்லை ,'' என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JANANI - chennai,இந்தியா
18-மே-201817:10:38 IST Report Abuse
JANANI Katchikku aal serkkum vagaiyil irukku unga koottam...
Rate this:
Share this comment
Cancel
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
18-மே-201809:32:03 IST Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar சொல்லாதீர்கள் செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை