நடிகைக்கு கொலை மிரட்டல்: போலீஸ் கமிஷனரிடம் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகைக்கு கொலை மிரட்டல்: போலீஸ் கமிஷனரிடம் புகார்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நடிகைக்கு கொலை மிரட்டல்: போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை, 'வெளிநாடுகளில் இருந்து, கொலை மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நடிகை ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூரு வாழ் தமிழரான, கே.கணேசன், கன்னட படங்களை இயக்கி வருகிறார். தமிழில்,2009ல், இலங்கையில் நடந்த இறுதிப்போரில் கொல்லப்பட்ட, 'டிவி' செய்தி வாசிப்பாளர், இசைப்பிரியாவின் கதையை மையமாக வைத்து, 2015ல், 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற படத்தை இயக்கினார். இசைப்பிரியாவாக, சென்னை, வடபழனியைச் சேர்ந்த, தன்யா என்பவர் நடித்துள்ளார்.இந்த படத்தை, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, குருநாத்சல்சானி தயாரித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். லண்டனில் வசித்து வரும், இசைப்பிரியாவின் உறவினர்கள், எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், 'போர்க்களத்தில் ஒரு பூ' படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், குருநாத் சல்சானி தயாரிப்பில், தன்யா நடிப்பில், கணேசன், 18.05.2009 என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை, 'ரிலீஸ்' செய்தவற்கான பணிகள் நடந்து வருகின்றன.இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநாடுகளில் இருந்து, மர்ம நபர்கள், நடிகை தன்யாவுக்கு, கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து நேற்று அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:10 ஆண்டுகளுக்கு முன், தந்தை இறந்துவிட்டார். வடபழனியில் தாயுடன் வசிக்கிறேன். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துஉள்ளேன். 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற படத்தில் நடித்தேன். அந்த படம் வெளிவரவில்லை. தற்போது, 18.05.2009 என்ற படத்தில் நடித்துஉள்ளேன்.'இந்த படம், 'ரிலீஸ்' செய்யப்பட்டால், கொன்றுவிடுவோம்' என, வெளிநாடுகளில் இருந்து, மர்ம நபர்கள், அலைபேசியில், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.ஒரு நடிகையாக என் வேலையை செய்துள்ளேன். இதற்காக, எனக்கு கொலை மிரட்டல் விடுப்பது அதிர்ச்சியளிக்கிறது.கொலை மிரட்டல் விடுப்பவர்கள், 'உனக்கு வெட்கமாக இல்லையாடி; நிர்வாணமாய் நடித்துள்ளாய்' என, மிகவும் கேவலமான வார்த்தைகளில் திட்டுகின்றனர்.இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கும், மிரட்டல்கள் வருகின்றன. இதனால், எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X