டி.ஜி.பி., அலுவலகத்திலேயே 'வாக்கி டாக்கி' மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.ஜி.பி., அலுவலகத்திலேயே 'வாக்கி டாக்கி' மாயம்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, டி.ஜி.பி., அலுவலகத்தில், மர்மான முறையில், 'வாக்கி டாக்கி' மாயமாகி இருப்பது, காவல் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில், காவல் துறை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுலக வளாகத்தில், துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கிகளை பாதுகாக்கும் கிடங்கும் உள்ளது.இயக்குனர் அலுவலகத்தில், தமிழக சிறப்பு காவல் படையைச் சேர்ந்த போலீசார், ஐந்து மாதங்களாக, பாதுகாப்பு அளித்து வந்தனர்.மே, 11ல், 'சி - கம்பெனி' அணியைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியை ஏற்றனர். அந்த அணிக்கு தலைமை ஏற்றுள்ள, இன்ஸ்பெக்டர் மயில்வாகனன் தலைமையிலான போலீசார், டி.ஜி.பி., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, வாக்கி டாக்கி மற்றும்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் சரியாக உள்ளதா என, ஆய்வு நடத்தினர்.இதில், ஒரு வாக்கி டாக்கி மாயமாகிஇருந்தது தெரிந்தது. அந்த வாக்கி டாக்கியை, இயக்குனர் அலுவலக பிரதான நுழைவு வாயிலில், பாதுகாப்பு பணியில் இருந்த, 7336 என்ற எண்ணுக்குஉரிய போலீஸ்காரர் கையெழுத்திட்டு வாங்கி உள்ளார்.அவரிடம் கேட்ட போது, வாக்கி டாக்கியை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், பதிவேட்டில் ஒப்படைத்ததற்கான கையெழுத்து இல்லை.இதையடுத்துமெரினா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.வாக்கி டாக்கி,மர்மான முறையில் மாயமாகி இருப்பது, போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துஉள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை