மருத்துவ பேராசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ பேராசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு, தற்காலிக பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்க உள்ளது.மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ அறிவிப்பு:அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகளில், உதவி பேராசிரியராக பணியாற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு, தற்காலிக முறையில், இணை பேராசிரியர் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.பொது மருத்துவம், காது - மூக்கு - தொண்டை, குழந்தை நலம், உளவியல், நரம்பியல், 'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சை உள்ளிட்ட, 31 துறைகளை சேர்ந்த டாக்டர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.இதற்கான கவுன்சிலிங், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில், வரும், 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு, www.tnhealth.org என்ற, இணையதளத்தை பார்வையிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை