யார் ஆண்டா என்ன... காவிரி தான் முக்கியம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

யார் ஆண்டா என்ன... காவிரி தான் முக்கியம்

Added : மே 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, ''கர்நாடகாவில் யாருடைய ஆட்சி அமைகிறது என்பது முக்கியமல்ல; காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரே முக்கியம்,'' என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் சூப்பர் சீனியர்கள், நாங்கள் இருக்கும் போது, ஜூனியர்கள் ஆட்சி கட்டிலில் ஏற முடியாது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைந்தாலே, தமிழகத்திற்கு இடைக் காலத்தில் கிடைக்க வேண்டிய, 4 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும்.தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேறி உள்ளன. நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும். டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைபெறும் போட்டி அரசியலில், எது வேண்டுமானாலும் நடக்கலாம்; பொறுத்திருந்து பார்ப்போம். கர்நாடகாவில் யார் ஆட்சி என்பது நமக்கு முக்கியமல்ல; நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை, தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். நமக்கு அதுதான் முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Pandiarajan - tirupur,இந்தியா
18-மே-201806:28:07 IST Report Abuse
S.Pandiarajan ஆமா யார் ஆண்டா என்ன எங்களுக்கு இங்கு ஆட்சி நடந்தா போதும் .நாங்க எப்பவும் பிஜேபி அடிமைகள்தான்
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
18-மே-201818:38:36 IST Report Abuse
sethuகாவேரிக்கு துரோகம் செய்தவனை விட்டுவிட்டு அதை பெற்றுக்கொடுத்தவனை குறைசொல்லும் உன்கருத்தை யார்கேட்ட்து...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை