தைல மரங்களை வெட்டி அழித்த திருநங்கையர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தைல மரங்களை வெட்டி அழித்த திருநங்கையர்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை, புதுக்கோட்டை அருகே, தனியார் நிலத்தில் இருந்த தைல மரங்களை சமூக அமைப்பினர்மற்றும் திருநங்கையர் இணைந்து வெட்டிஅழித்தனர்.வானம் பார்த்த பூமியான புதுக்கோட்டை மாவட்டத்தில், ஒரு லட்சம் ஏக்கர்பரப்பளவில் தைல மரக்காடுகள் உள்ளன. இதில், 45 ஆயிரம் ஏக்கர் தைலமரங்கள் தமிழக அரசின் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ளன.சில ஆண்டுகளாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டத்தை நம்பியே, விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.ஆனால், தைல மரங்களின் தாக்கத்தால், 700 அடி முதல், 1200 அடி வரை ஆழ்குழாய் அமைத்து நீர் கிடைக்காத நிலையில்உள்ளன.இதனால், தைலமரங்களின் தீமைகளை விவசாயிகள் உணர தொடங்கினர். விவசாயி ஒருவருக்கு, துவார் பகுதியில் உள்ள, மூன்று ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்ட தைலமரங்களை நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட திருநங்கையர் தனியார் அமைப்பினருடன் சேர்ந்து வெட்டி அழித்தனர்.பின், அந்த இடத்தில் தென்னை, வேம்பு, மா போன்ற மர கன்றுகளையும் நட்டனர். இதேபோல, புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் இப்பணி தொடர்ந்து நடக்கும் என்று அவர்கள் தெரிவித்துஉள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை