5 ஆண்டாக எந்த பாதிப்பும் இல்லை தீர்ப்பாயத்தில் 'ஸ்டெர்லைட்' வாதம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

5 ஆண்டாக எந்த பாதிப்பும் இல்லை தீர்ப்பாயத்தில் 'ஸ்டெர்லைட்' வாதம்

Added : மே 17, 2018
Advertisement

சென்னை, 'ஸ்டெர்லைட் ஆலையால், 2013 முதல் எந்த பாதிப்பும் இல்லை' என, மாசுக் கட்டுப்பாடு வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வாதிடப்பட்டது.துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை, தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி சான்று, மார்ச், 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. அனுமதி சான்றை புதுப்பிக்க கோரி, ஸ்டெர்லைட் சார்பில், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது; மாசு கட்டுப்பாடு வாரியம் மறுத்தது.இதை எதிர்த்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வாரியம் சார்பில், அரசு வழக்கறிஞர் அப்துல் சலீம், ஸ்டெர்லைட் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன், வழக்கறிஞர், ஏ.எல்.சுந்தரேஷ், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உட்பட பலர் ஆஜராகினர்.ஸ்டெர்லைட் தரப்பில், பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:அனுமதி சான்று புதுப்பிக்க மறுத்ததற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஐந்து காரணங்களை கூறியுள்ளது. ஆனால், அது தொடர்பாக, எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. அதற்கான அவகாசமும் வழங்கப்படவில்லை. 2013ல் எழுந்த பல்வேறு பிரச்னைகளால், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டோம். ஆலை தொடர்ந்து செயல்பட, தீர்ப்பாயம் அனுமதித்தது.மேலும், ஆலை இயங்குவதால், நிலத்தடி நீர், காற்றில் மாசு ஏற்படுகிறதா, நோய் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய, சிறப்பு குழுவை தீர்ப்பாயம் அமைத்தது. அந்தக் குழு, ஸ்டெர்லைட் ஆலையால், காற்று, நிலத்தடி நீருக்கு, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. அதேபோன்று, நோய் பாதிப்பும் இல்லை என, தெரிவித்தது.அதன்பின், ஆலை தொடர்ந்து செயல்பட தீர்ப்பாயம் அனுமதித்தது. 2013ம் ஆண்டுக்குப் பின், இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து பின்பற்றுகிறோம். மூன்று ஆண்டுகளாக, மாசுக் கட்டுப்பாடு வாரியம், நிலத்தடி நீரை ஆய்வு செய்து வருகிறது. அதில், எந்த பாதிப்பும் இல்லை என, அவர்களே சான்று அளித்துஉள்ளனர்.இவ்வாறு அவர் வாதாடினார்.அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த தீர்ப்பாயம், ஜூன் 6ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.ஒத்திவைப்புதுாத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை,உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.துாத்துக்குடியை சேர்ந்த பாத்திமா என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனு:சிப்காட்-2 தொழில் பூங்கா வளாகத்தில், ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் துவங்க உள்ளனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தடையில்லாச் சான்று, 2009 ல் வழங்கப்பட்டது. அது, 2015 மற்றும் 2016 ல் புதுப்பிக்கப்பட்டது.இதில் எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. மக்களிடம் கருத்துக் கோரவில்லை. ஆலையின் இரண்டாவது யூனிட் விரிவாக்க கட்டுமானப் பணி மற்றும் மத்திய அரசின் தடையில்லாச் சான்றிற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நீதிபதிகள், எம்.சுந்தர், அனிதா சுமந்த்அமர்வு விசாரித்தது. ஸ்டெர்லைட் வழக்கறிஞர், 'மத்திய அரசு, 2009 ல் வழங்கிய சான்று மற்றும் அதை புதுப்பித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒரே நிவாரணத்திற்கு மீண்டும் வழக்குத் தொடர முடியாது' என்றார்.நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X