பழநி கோயில் சிலை மோசடி வழக்கு மாஜி கமிஷனரை கைது செய்ய தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழநி கோயில் சிலை மோசடி வழக்கு மாஜி கமிஷனரை கைது செய்ய தடை

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உற்சவர் சிலை செய்ததில் மோசடி வழக்கில், அறநிலையத்துறைமுன்னாள் கமிஷனர் தனபாலைகைதுசெய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.பழநி கோயில் சிலை மோசடி வழக்கில் முன்னாள் இணை கமிஷனர் கே.கே.ராஜா, சிலையை வடிவமைத்தஸ்தபதி முத்தையாவிற்கு உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. இவ்வழக்கில் சென்னையைச் சேர்ந்த அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால், 'போலீசார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுகின்றனர். எனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' எனமனு செய்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.மனுதாரர் வழக்கறிஞர்,''14 ஆண்டுகளுக்கு முன் சிலை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஸ்தபதியின் அறிக்கையில் அப்போதுஅறநிலையத்துறை அதிகாரிகளாக இருந்த சிலர் கையெழுத்திட்டுள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது. அதன்படி, சம்பவம் பற்றி மனுதாரருக்கு தெரிந்திருக்கும் என எப்படிஉறுதியாகக்கூற முடியும்?,'' என்றார்.நீதிபதி: மனுதாரரை மே 23 வரை கைது செய்யக்கூடாது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுபோலீசாரிடம் அரசு வழக்கறிஞர் விபரம்பெற்று தெரிவிக்க வேண்டும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை