மின் பொறியாளர்கள் 20பேர் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் பொறியாளர்கள் 20பேர் இடமாற்றம்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்யும் உத்தரவின்படி, 20 செயற் பொறியாளர்களை, மின் வாரியம், இடமாற்றம் செய்துஉள்ளது.ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரி வோரை இடமாற்றம் செய்ய, 2017ல், மின் வாரியம் உத்தரவிட்டது. சிலர், அரசியல் சிபாரிசுகளுடன், அந்த உத்தரவை கிடப்பில் போட முயற்சித்தனர். இது தொடர்பாக, மின் வாரிய தலைவர் விக்ரம் கபூருக்கு, புகார்கள் சென்றன.இதையடுத்து, முதல் கட்டமாக, செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர்கள் என, பிரிவு ஒன்றில், ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது.இதன்படி, மெக்கானிக்கல் பிரிவில், ஒரே இடத்தில், பல ஆண்டுகள் பணிபுரியும், 20 செயற் பொறியாளர்களை, மின் வாரியம், நேற்று முன்தினம் இரவு, இடமாற்றம் செய்துள்ளது.இது குறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: மின் வினியோகம் மற்றும் பிரிவு அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள், பொறியாளர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். இடமாறுதலில் முறைகேட்டை தடுக்க, எத்தனை பேர், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர்; அவர்கள், எங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை, மின் வாரியம், வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். - நமது நிருபர் -இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை