ஆர்.டி.இ., ஆன்லைன் பதிவு: மதுரை முன்னிலை மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.இ., ஆன்லைன் பதிவு: மதுரை முன்னிலை மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை "தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,) நடக்கும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் மதுரை முன்னிலையில் உள்ளது," என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் ஆர்.டி.இ.,யின் கீழ் நுழைவு வகுப்புக்காக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செய்ய, இன்று (மே 18) கடைசி நாள். கல்வித்துறை, தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுக்கு நல்ல பலன் கிடைத்தது. இதுவரை 8,500 க்கும் மேல் விண்ணப்பம் பதிவு செய்து மதுரை முன்னிலையில் உள்ளது. 6950 விண்ணப்பங்களுடன் சென்னை 2ம் இடத்திலும், 6784 விண்ணப்பங்களுடன் வேலுார் 3ம் இடத்திலும் உள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 723 பேர் பதிவு செய்துள்ளனர். இவை பரிசீலிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மே 28ல் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிகழ்வு பெற்றோர் முன்னிலையில் வெளிப்படையாக நடக்கும். இதில் தவறு நடப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X