ஐ.பி.எல்.,: பெங்களூரு அணி வெற்றி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.பி.எல்.,: பெங்களூரு அணி வெற்றி

Updated : மே 18, 2018 | Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஐ.பி.எல்.,: பெங்களூரு அணி, வெற்றி

பெங்களூரு: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி, 14 ரன் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பெங்களூரு அணிக்கு டிவிலியர்ஸ் (69), மொயீன் அலி (65), கிராண்ட்ஹோம் (40) கைகொடுக்க, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 218 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான், 3 விக்கெட் கைப்பற்றினார்.

கடின இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு கேப்டன் வில்லியம்சன் (81), மணிஷ் பாண்டே (62*) கைகொடுக்க, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 204 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 6வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி, 12 புள்ளிகளுடன் 'பிளே-ஆப்' வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X