22 ஆண்டு கோபத்திற்கு பழி தீர்த்த வஜுபாய் வாலா Dinamalar
பதிவு செய்த நாள் :
22 ஆண்டு கோபத்திற்கு
பழி தீர்த்த வஜுபாய் வாலா

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா மீது, 22 ஆண்டுகளுக்கு முன் இருந்த கோபத்தை, கர்நாடக மாநில கவர்னர் வஜுபாய் வாலா, தற்போது தீர்த்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

 22 ஆண்டு ,கோபத்திற்கு, பழி தீர்த்த, வஜுபாய் வாலா


கடந்த, 1996ல், குஜராத்தில், பா.ஜ., ஆட்சி நடந்த போது, அரசை கவிழ்க்க முயற்சித்த காங்கிரஸ், அரசுக்கு எதிராக, சட்டசபையில் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தது.அப்போது, குஜராத் கவர்னராக, கிருஷ்ண பால் சிங்கும், அம்மாநில, பா.ஜ., தலைவராகவஜுபாய் வாலாவும் இருந்தனர்.நம்பிக்கை ஓட்டெடுப்பு

நடந்த போது, சட்ட சபையில் பெரும் அமளி நடந்தது. சூழ்நிலையை உணர்ந்த சபாநாயகர், எதிர்க்கட்சி யினரை வெளியேற்றி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவாய்ப்பளித்தார்.


இதில், சுரேஷ் மேத்தா தலைமையிலான, பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. குஜராத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்தது. சட்டசபையில் கூச்சல், குழப்பம் நடந்ததாக, கவர்னராக இருந்த, கிருஷ்ண பால் சிங், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.


அப்போது பிரதமராக இருந்த தேவகவுடா, குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தார்.இதையேற்று, குஜராத்தில்,ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப் பட்டது. இதனால்,அப்போது,குஜராத் மாநில, பா,ஜ., தலைவராக இருந்த, வஜுபாய் வாலா, பிரதமராக இருந்த தேவகவுடா மீது, கடும் கோபம் அடைந்தார்.


இந்நிலையில், 22 ஆண்டுக்கு முன், குஜராத்தில் நடந்த அதே அரசியல் நெருக்கடி, கர்நாடகாவில்

Advertisement

தற்போது நிலவுகிறது. முடிவெடுக்கும் நிலையில், வஜுபாய் வாலாவும், மகனை முதல்வராக்க, வஜுபாய் வாலாவிடம் கெஞ்சும் நிலையில் தேவகவுடாவும் உள்ளனர்.


இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், 'எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்க அழைத்ததன் வாயிலாக, 22 ஆண்டுகளுக்கு முன், தேவகவுடா மீது இருந்த கோபத்தை, வஜுபாய் வாலா, தற்போது தீர்த்து உள்ளார்' என்றன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
18-மே-201820:47:13 IST Report Abuse

mohankumarதிமுக அரசை இரண்டு முறை இதே காங்கிரஸ் அநியாயமாக டிஸ்மிஸ் செய்தார்களே .இந்திராகாந்தி ஓருமுறை😢 சந்திர சேகரை மிரட்டடி ராஜிவ்காந்தி ஓரு முறை .எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்

Rate this:
Shriram - Chennai,இந்தியா
19-மே-201807:19:35 IST Report Abuse

Shriramசந்தடி சாக்குல திமுக ஜாராவா? அதெல்லாம் இனி எடுபடாது....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மே-201819:13:44 IST Report Abuse

Pugazh Vஇவ்வளவு வயசாகியும் இம்மெச்சூர்டாக பக்குவமே இல்லாமல் பிஹேவ் பண்றாரா??

Rate this:
skv - Bangalore,இந்தியா
19-மே-201805:18:06 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>வாட் இம்மேச்சுரா டா அம்பு எய்தவனுக்கு வலிக்காது அடிபட்டானே அவனுக்கே தான் வலியும் வேதனையும்...

Rate this:
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
18-மே-201819:04:27 IST Report Abuse

Vijay D.Ratnamகுடும்ப அரசியல், பரம்பரை அரசியல், வாரிசு அரசியல் இந்தியாவை பிடித்த தொழுநோய். எய்ட்ஸை விட கொடுமையான நாத்தம் பிடித்த வியாதி. அப்பன் பதவிக்கு வந்துட்டா போதும் மவன், மவ, மறுமவன் பேரன், பேத்தி வரைக்கும் தகுதியே இல்லாத தற்குறிகளுக்கெல்லாம் அரிப்பெடுக்க பதவிஅரிப்பு எடுக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த அயோக்கியத்தனம் ஒழிக்கப்படவேண்டும்.

Rate this:
Mal - Madurai,இந்தியா
18-மே-201818:54:37 IST Report Abuse

MalGovernor has done only his duty. If congress had asked permission to form government with the help of JDS...(with Congress CM) then governor would have given it a thought ... And would have looked into other examples of Goa n Meghalaya... But congress degraded the verdict of the people and made JDS (which failed in people's court) to take up CM post. All other places have had only second place winners in the CM post ... Not losers. With the show congress is making people will make sure that they are wiped out completely from India so that India doesn't have any clown party which always s tensions. India needs development ... And it has to grow along with the world but Congress will only try to deteriorate India so that their foreign masters feel happy.

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மே-201815:48:02 IST Report Abuse

J.V. Iyerகான்-கிரேஸ் காரனுவ ரொம்ப கெட்டவனுங்க மச்சி. கொஞ்சம்கூட கருணை காட்டாதீங்க. ராகுல் இந்தியாவையே விற்றுவிடுவார். பண ப.சி. பணத்தை வெளிநாட்டில் பதுக்குகிறார். இவிங்க கெட்டவனுங்க மச்சி. நாட்டுபற்று இருப்பவன் கான்-கிரெஸ்ஸை மதிக்கமாட்டான். மிதிப்பான்.

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-201814:37:11 IST Report Abuse

Yaro Oruvanஅதானே பாத்தேன்.. லுங்கி / பாவாடை பாய்ஸ் ஒருத்தரும் 1996 நடந்தது தப்புன்னு இப்பகூட சொல்லமாட்டாங்களே?? பாசு முள்ள முள்ளாலதான் எடுக்கோணும்.. நீங்க செஞ்சா தக்காளி சட்னி பிஜேபி செஞ்சா ரத்தம்.. நல்லா வருவீங்கப்பா.. புள்ள குட்டிகளையாவது படிக்க வைங்கப்பு..

Rate this:

ஸ்ரீனிவாசன்,COIMBATOREஇந்த வயதில் கேவலமான ஜனநாயகப் படுகொலை செஞ்சது பெருமையா..?

Rate this:
Raman - Lemuria,இந்தியா
18-மே-201819:31:18 IST Report Abuse

Ramanதேர்தலுக்கு பின்னால் ஏற்பட்ட கூட்டணி மக்கள் ஆதரவு பெற்றது என்று கூற முடியுமா ? எல்லோருமே ஜனநாயகப் படுகொலை செய்கிறார்கள் . இரண்டுமே தவறு...

Rate this:
nizamudin - trichy,இந்தியா
18-மே-201812:00:50 IST Report Abuse

nizamudinபழி தீர்ப்பதுதான் நம் முதல் வேலை அதுகுக்குத்தானே பிறந்திருக்கிறோம்

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
18-மே-201811:26:05 IST Report Abuse

பாமரன்தேவ கவுடா ஆச்சர்யப்படும் விதமா இதுவரை யாரிடமும் கெஞ்சவில்லை...

Rate this:
Shriram - Chennai,இந்தியா
19-மே-201807:22:30 IST Report Abuse

Shriramநா சைக்கிள் காப்புலயும் ஒரு டிரேயின ஒட்ட உங்களாதான் முடியும்......

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
18-மே-201810:25:34 IST Report Abuse

Balaji சபாஷ் வாலா. பழிக்கு பழி. குமாரசுவாமி என்ன கொம்பா?

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement