பழநிக்கு இன்று முதல்வர் வருகை 'கொடை' ரோட்டில் போக்குவரத்து மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநிக்கு இன்று முதல்வர் வருகை 'கொடை' ரோட்டில் போக்குவரத்து மாற்றம்

Added : மே 18, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி கொடைக்கானலுக்கு பழநி வழியாக முதல்வர் செல்வதால், பழநி- - கொடைக்கானல் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.கொடைக்கானலில் மலர்க்கண்காட்சியை நாளை (மே19) முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார். இதில் பங்கேற்க பழநி வழியாக இன்று (மே 18) இரவு முதல்வர் கொடைக்கானல் செல்கிறார். இதனால் டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார் பழநி பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, புதுதாராபுரம் ரோடு, கொடைக்கானல் ரோட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.பழநி- - கொடைக்கானல் ரோடு, பழநி அடிவாரம் ரோடு, திண்டுக்கல்ரோடு, புதுதாராபுரம் ரோடு, பஸ் ஸ்டாண்டு பகுதி வாகனபோக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.முதல்வர் வருகையால் பழநி - -கொடைக்கானல் ரோடு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.இதுகுறித்து டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார் கூறுகையில், ''முதல்வர் வருகையை முன்னிட்டு பழநி, கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் இருந்து வரும் வாகனங்கள் பெருமாள்மலையில் இருந்து வத்தலக்குண்டுவழியாக திருப்பிவிடப்படும். பழநியில் வரவேற்பு மட்டும்தான், முதல்வர் கொடைக்கானலில் தங்குகிறார்,''என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JANANI - chennai,இந்தியா
18-மே-201817:16:01 IST Report Abuse
JANANI தமிழக அரசின் நலப்பணி திட்டங்கள் தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை