பழநியில் முடங்கிய ரூ.400 கோடி பணிகள் முடுக்கி விடுவாரா முதல்வர் பழனிச்சாமி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் முடங்கிய ரூ.400 கோடி பணிகள் முடுக்கி விடுவாரா முதல்வர் பழனிச்சாமி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி, பழநி முருகன் கோயில் மற்றும் நகராட்சியில் ரூ.400 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் கிடப்பில் உள்ளதை, செயல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆன்மிக சுற்றுலா தலமான பழநி முருகன் கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.அதற்கேற்ப பழநி நகர வளர்ச்சிக்கும், பக்தர்கள் வசதிக்காகவும் ரூ.பலகோடி மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.அவற்றில் சில துவங்கி முடிக்கப்படாமலும், சில துவங்காமலும் உள்ளன. இதில் முக்கியமாக பழநி நகரில் பாதாளசாக்கடை திட்டம் ரூ.110 கோடி, ரூ.21 கோடியிலான குடிநீர் அபிவிருத்தி பணி துவங்கி 4 ஆண்டுகளாகியும் முடிக்கப்படாமல் உள்ளது. பழநிகோயிலில் இரண்டாம் ரோப்கார் அமைக்க இடம் தேர்வு செய்து, ரூ.72கோடி என திட்ட மதிப்பீடு செய்து, டெண்டர்விடப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதேபோல ரூ.150 கோடியில் நவீன வின்ச் அமைக்கும்பணி, ரூ.15கோடி செலவில் பாலாறு- - பொருந்தலாறு அணையில் இருந்து நேரடியாக கோயிலுக்கு குடிநீர் கொண்டுவரும் பணி, விடுதிகாலமுறை பராமரிப்பு பணிகள், நந்தவனம் அமைக்கும்பணி, கும்பாபிஷேக திருப்பணிகள் என ரூ.பலகோடி மதிப்பிலான பணிகள் உள்ளது.பொதுப் பணித்துறை சார்பில் ரூ.50 கோடியிலான பச்சையாறு அணைக்கட்டு, ஒட்டன்சத்திரம் நல்லதங்காள் அணை திட்டம் கிடப்பில் உள்ளன. மொத்தம் ரூ.400கோடி மதிப்பிலான, பழநிநகர வளர்ச்சிப்பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தவும், கோயில் காலிப்பணியிடங்களை நிரப்பவும் முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X