சீரமைக்கப்படுமா சேதமான எம்.ஜி.ஆர்., நகர் சமுதாயக்கூடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீரமைக்கப்படுமா சேதமான எம்.ஜி.ஆர்., நகர் சமுதாயக்கூடம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தாண்டிக்குடி, காமனுார் ஊராட்சி எம்.ஜி.ஆர்., நகரில் சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ள சமுதாயக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளுக்கு முன் காமனுார் ஊராட்சி பகுதியினர் விழாக்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் எம்.ஜி.ஆர்., நகரில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகள் பராமரிப்பில் அக்கறை காட்டாததால் மின் இணைப்பு துண்டிப்பு, மேற்கூரை சேதம், சுவர்களில் விரிசல், வளாக புதர்மண்டியது என சில ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. இப்பகுதியினர் சமுதாயக் கூடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது தனி அதிகாரிகள் வசம் உள்ள ஊராட்சியில் சேதமடைந்தசமுதாயக் கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை