1,200 தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்புகபட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,200 தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்புகபட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், 'உயர்நிலைப் பள்ளிகளில் 1,200 தலைமை ஆசிரியர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.இந்த அமைப்பின் மாவட்ட குழுக்கூட்டம் தலைவர் ராஜாக்கிளி தலைமையில் நடந்தது. செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் கிருஷ்ணதாஸ், அமைப்பு செயலாளர் காஜாமைதீன் உட்பட பலர் பங்கேற்றனர். அவர்கள் விடுத்த அறிக்கை:அரசின் கொள்கை முடிவாக ஏற்று, காலியாக உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பி, ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தவேண்டும். மாணவர், ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில் உபரி பணியிடம் காட்டி பணிநிரவல் செய்வதை தவிர்த்து, அந்தந்த மாவட்டத்திற்குள்ளேயே பணி நிரவல் செய்ய வேண்டும்.முதுகலை ஆசிரியர்களுக்கு போதிய பாடவேளை இல்லையென்றுகூறி, 9,10ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும்படி கூறக்கூடாது. இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் உபரியெனகூறி பணி நிரவல் செய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X