விபத்து, போலீஸ் செய்திகள்...| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து, போலீஸ் செய்திகள்...

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெண் பலி செந்துறை:: செந்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சந்திரன்,65. இவரது மனைவி ராமதிலகம்,55. இருவரும் கோட்டைப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். மேட்டுப்பட்டி பிரிவு அருகே துவரங்குறிச்சியில் இருந்து எதிரே வந்த அரசு பஸ்மோதியது. ராமதிலகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். சந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.நகை திருட்டு கொடைக்கானல்:: கொடைக்கானல்செண்பகனுார் பகுதியில் வசிப்பவர் உதயசுதாகர் 46, இவர் மகனின் சிகிச்சைக்காக வெளியூர் சென்றார். தமது வீட்டுக்கு திரும்பியதும் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஆறரை பவுன், ரூ. 3 ஆயிரம் திருடு போனதை அறிந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.திருடியவர்கள் கைது வடமதுரை:: தென்னம்பட்டி கணபதிபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜாராம்,28. வீட்டை சரிவர பூட்டாமல் இரவு நேரத்தில் வீட்டினுள் துாங்கி கொண்டிருந்தார். வீட்டிற்குள் நுழைந்த தென்னம்பட்டி சுரேஷ், 24, வடமதுரை ஏழுமலை, 28. ஆகியோர் ராஜாராமின் அலைபேசியை திருடினர். அவர்களில் ஒருவர் மேஜையில் மோதிய சத்தம் கேட்டு எழுந்த ராஜாராம் இருவரையும் துரத்தியதில் சுரேஷ் சிக்கினார். நேற்று ஏழுமலையும் பிடிபட்டார். இருவரையும் வடமதுரை போலீசார் கைது செய்தனர்.விபத்தில் பலிவத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டைச் சேர்ந்த பெரியசாமி மகன் பிரகாஷ், 25. நேற்று முன் தினம்இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஊருக்குச் சென்றார். எதிரே சங்கனாச்சேரியில் இருந்து வந்த அரசு பஸ் இரு சக்கர வாகனத்தில்நேருக்கு நேர் மோதியதில் பிரகாஷ் சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்த உறவினர்கள் பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். வத்தலக்குண்டு போலீசார்விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X