வத்தலக்குண்டு மக்கள் அச்சத்திற்கு காரணமென்ன| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வத்தலக்குண்டு மக்கள் அச்சத்திற்கு காரணமென்ன

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வத்தலக்குண்டு, வத்தலக்குண்டில் வீடுகளில் தொடர்ந்து திருடு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.வத்தலக்குண்டில் மே 14ல் வீடு புகுந்து 34 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கம், தெற்கு தெருவில் 7 பவுன் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. போலீசார் இதுகுறித்த விசாரைணையை துவங்கவில்லை. நேற்று காந்தி நகர் விரிவாக்கத்தில் பாலமுருகன் என்பவர் வீட்டில் கொள்ளை போனது. இவர் குடும்பத்தினருடன்வத்தலக்குண்டில் உள்ள கோயிலுக்கு சென்று திரும்பிய போது வீட்டின் கதவு திறந்திருந்தது. திடுக்கிட்ட பாலமுருகன் வீட்டிற்குள் சென்று பார்த்த போதுபீரோவிற்குள் இருந்த 8 பவுன் நகை, குழந்தைகள் பள்ளி கட்டணம் செலுத்த வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை காணவில்லை. வத்தலக்குண்டு போலீசில்புகார் செய்தார். கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரு மணி நேரத்தில் சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர். வத்தலக்குண்டு பகுதியில்தொடர் கொள்ளை, செயின் பறிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X