சிறுமலையை சேர்ந்தவர்களுக்கு சோலார் பேனல், 'எல்.இ.டி.,' பல்புகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமலையை சேர்ந்தவர்களுக்கு சோலார் பேனல், 'எல்.இ.டி.,' பல்புகள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் சிறுமலை மலைவாழ் மக்கள் 452 பேருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் சோலார் பேனல் மற்றும் 3 எல்.இ.டி., பல்புகள் வழங்க இருப்பதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் சிறுமலை, கொடைக்கானல் மலைக்கிராமங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளில் மின்சார வசதி ஏற்படுத்தவில்லை.அடர்ந்த காடு வழியே மின்சாரம் கொண்டு செல்கையில் விபத்து ஏற்பட்டால் காடுகள், விலங்குகள் பாதிக்கப்படும். இருப்பினும் வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மின்சார வசதி கேட்டு வருகின்றனர்.எனவே அப்பகுதியினருக்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டது. அதற்காக, கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு சோலார் பேனல்கள் மற்றும் எல்.இ.டி., பல்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக சிறுமலையை சேர்ந்த 452 பேருக்கு 15 ஆயிரம் மதிப்புள்ள 5 வாட் திறன் கொண்ட தலா 3 எல்.இ.டி., பல்புகள், சோலார் பேனல் இணைப்புடன் வழங்கப்பட உள்ளது, என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை