கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ சேவை வழங்குவது குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ,கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது.தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உட்பட பல்வேறு பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண் டார். சிறப்பான மருத்துவ சேவை வழங்குவது குறித்து மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய்துறை, பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சிதுறை, பேரூராட்சி துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந் தார்.கலெக்டர் தெரிவித்ததாவது:தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தினமும் 2,000 வெளிநோயாளிகள், 1,200 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 20 குழந்தைகள் வீதம் மாதம் 600 குழந்தைகள் பிறக்கிறது. எம்.ஆர்.ஐ.,ஸ்கேனில் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ. 2,300 மட்டுமே செலுத்த வேண்டும்.முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் இலவசமாக எடுக்கப்படு கிறது, என்றார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சக்திவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை