குப்பைக்கு வந்த 'ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பைக்கு வந்த 'ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்'

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார், காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சோர்வடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உப்பு சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ்.) பாக்கெட் வழங்கப்படும்.காலாவதியாகிவிட்ட 500 க்கும் மேற்பட்ட இந்த பாக்கெட்டுகள், கூடலுாரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நடுத்தெருவில் குப்பையில் போடப்பட்டிருந்தன. சிகிச்சை பெற வருபவர்களுக்கு உரிய நேரத்தில் இந்த கரைசலை வழங்காமல் இருப்பு வைத்து விட்டு, வீணாக குப்பையில் வீசியதற்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முருகன் கூறும்போது, ''இந்த பாக்கெட் 2016 ஆகஸ்ட் மாதம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2018 ல் காலாவதியாகிவிட்டன. இதில் குறிப்பிட்டுள்ள ''பேட்ஜ் நம்பர் 1647', கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது இல்லை. இது குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுஉள்ளது'', என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை