கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் மீண்டும் ஒத்திவைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் மீண்டும் ஒத்திவைப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம், கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக அறிவிப்பு செய்வதும், பின்னர் அதை ஒத்திவைப்பதையும் நெடுஞ்சாலைத்துறைவாடிக்கையாக வைத்துஉள்ளது.கம்பம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றப் போவதாக கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறைஅறிவித்தது. கடும் கோடை மற்றும் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவை காரணம் காட்டி மே 17க்கு அது ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.பின்னர் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று வர்த்தகர்களிடம் கையெழுத்து பெற்றுசென்றனர். ஆனால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மே 23 ல்அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு காரணம் என்ன அதிகாரிகளிடம்கேட்டதற்கு, 'நாங்கள் தயாராக இருக்கிறோம். முதல்வர் வருகைக்கு போலீசார் திண்டுக்கல் செல்வதால் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு பாதுகாப்பு தர முடியாது என கூறிவிட்டனர். அதனால் தான் ஒத்திவைக்கப்பட்டது,'என்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி ஒத்திவைப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X