மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, வீரபாண்டி வயல்பட்டியில் அரசு கலைக்கல்லுாரி, அங்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வருகிறது. பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பி.ஏ., பொருளாதாரம், பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.சி.ஏ., ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் உள்ளன. 2018 -- 2019க்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியிருப்பதாவது:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 வசூலிக்கப்படும். விண்ணப்பங்கள் மே 30 வரை வழங்கப்படும்.அன்று மாலை 5:00 மணிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். விடுமுறை தினங்கள் தவிர்த்து விண்ணப்பங்கள் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை அங்கு வழங்கப்படும். 81445 67348 என்ற அலைபேசி எண்ணில் கூடுதல் தகவல் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை