கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, மாநிலத்தில் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் இயக்குனர்களுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடந்தது. ஒருசில சங்கங்களின் தேர்தல் ரத்தானது. தேர்வான நிர்வாகிகள் பணிகளை கவனிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ,மே 21 முதல் காலவரையற்ற ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை மண்டல இணைப்பதிவாளர்கள், கலெக்டர்கள் மூலம் அரசுக்கு கோரிக்கை மனுக்களாக வழங்கியுள்ளனர்.தேனி இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மனு வழங்கிய மாநில இணைச் செயலாளர் காமராஜ்பாண்டியன், மாவட்டத் தலைவர் அருணகிரி, பொருளாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன்கள், நகைக்கடன், ரேஷன் கடைகளுக்கு குடிமைப் பொருள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை கவனிக்க வேண்டும். ஆனால் நிர்வாகிகள் தேர்வில் குளறுபடி, வழக்குகள் நிலுவை, தேர்தல் ரத்து போன்ற காரணங்களால் பணிகள் செய்ய முடியவில்லை இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என, 42,000 பணியாளர்களும் காலவரையற்ற ஒட்டு மொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X