கம்பன் கழக விழா இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்பன் கழக விழா இன்று துவக்கம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் கம்பன் கழக 15 ம் ஆண்டு நிறைவு விழா 3 நாட்கள் நடக்கிறது. இன்று (மே 18) மாலை 5:30 மணிக்கு கம்பர் திருஉருவ பட வீதி உலா பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் சந்திப்பில் இருந்து துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. 'கம்பனின் தமிழமுது' நுாலை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி சத்தியமூர்த்தி வெளியிடுகிறார். பட்டிமன்ற நடுவர் சாலமன்பாப்பையா துவக்கி வைக்கிறார். நாளை மாலை 6:00 மணிக்கு பேராசிரியர் ராமமூர்த்தி தலைமையில் 'சீதை சிறையெடுப்பு' என்ற தலைப்பில் கவிஞர்கள் பேசுகின்றனர். இரவு 7:45 மணிக்கு பாலா நந்தகுமாரின் நாட்டியாஞ்சலி நடைபெறும். மே 20 காலை 10:00 மணிக்கு பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தலைமையில் 'எண்களும், எண்ணங்களும்' என்ற சிந்தனை அரங்கம், மாலை 6:00க்கு விருதுவழங்கல் மற்றும் 'நெஞ்சம் நெகிழ வைக்கும் தந்தை' என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜின் பட்டிமன்றம் நடக்கிறது. கம்பன் கழக நிர்வாகிகள் சாலமன் பாப்பையா, சங்கர சீத்தாராமன், புருேஷாத்தமன், சொ.சொ.மீ.சுந்தரம் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை